Monday, 21 May, 2007

ஜாதிச் சண்டை ஒழிந்து விட்டது...உலகத்தை ஒன்னாப் பாருங்க

இப்பல்லாம் ஜாதிக்குள்ளயே சண்டை போட்டுக்கிறாங்க. ஏன்டான்னா இதான் புது ஃபேஷனாம். சண்டை போடுறதுக்குமாடா ஃபேஷன்? எனக்கு தெரிஞ்சு இந்தியால மட்டுந்தான் மத்த மாநிலத்துல இருந்து வர்றவங்களையும் அன்னியமா நெனக்கிறோம். என்னோட ஆன்ட்டி கூட பேசும் போதெல்லாம் (இவங்க மகாரஷ்டிரா. நான் இருக்கிற வீட்டு ஓனரோட மனைவி) சென்னையில இருந்து எங்க மாநிலத்துக்கு வந்துட்டு, எங்களையே கேள்வி கேட்கிறியான்னு வெளையாட்டா அடிக்கடி சொல்வாங்க. ஒரு தடவை நானே திருப்பி கேட்டேன், "ஏன் இப்படி இந்தியால இருந்துட்டே ஸ்டேட் வாரியா பிரிச்சி பேசுறீங்க?". அதுக்கு, "அத ஏன் என்ட்ட கேட்கிற, இதே மாதிரி பேசுற வேற எவன்ட்டயாவது கேளு"ன்னாங்க. இதே மாதிரி எல்லாரும் மத்தவன கேளு, மத்தவனக் கேளுன்னு சோல்லிட்டே இருந்தா, யாருங்க பதில் சொல்லுவா?

பஸ்ல ஏறி ஸீட் பிடிக்கிறதுக்கு கூட சண்டை. போன வாரம் ஆபிஸ் முடிஞ்சு (ஏய்! நீ ஆபிஸ்லலாம் வேலை பாக்குறியா?) வீட்டுக்கு போக பஸ்ல ஏறி ஒக்காந்தேன். எதிர் பார்த்த மாதிரியே ஒருத்தர் கூட வந்தவருக்காக கர்சீஃப் ஒன்ன முன் சீட்ல போட்டுட்டு அதுக்கு பின் சீட்ல ஒக்காந்தாரு. அது தெரியாம பெரியவர் ஒருத்தர் அந்த துண்டு போட்ட சீட்ல ஒக்காரப் பார்த்தாரு. சண்டை ஆரம்பிச்சாச்சு. அடுத்த அரைமணி நேரம் அவங்க வாயத்தான் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க. துண்டு போட்டவருக்கு கொழுப்பு ஜாஸ்திதான். அவரு,"என் கர்சீஃப் மேல நீ எப்படி ஒக்காரலாம்? நாந்தான் என் கூட வந்தவருக்காக துண்டு போட்டிருக்கேன். நீ எப்படி அது மேல ஒக்காரலாம்ன்"னு கொஞ்சம் லோக்கல் கெட்ட வார்த்தையெல்லாம் சேர்த்து கேட்டாரு. உட்காரப் போன பெரியவரு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருந்தாரு. திட்டினவனும் இவன் எவ்வளவு திட்டினாலும் சும்மாயிருக்காண்டா (ரொம்ப நல்லவன்டா)ன்னு நெனச்சி கொஞம் ஓவராப் பேச, என்னாலத் தாங்க முடியாம, (அவருக்கு பின்னாடிதான் நான் ஒக்காந்திட்டிருந்தேன்) அவரு கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்டேன்." ஏங்க துண்டு மேல உக்காந்ததுதான் பிரச்சினைன்னா, அந்த உக்காரக் கூடாத துண்டத் தூக்கி ஏங்க உக்கார்ற இடத்துல வச்சீங்க?"ன்னேன்.தலைவர் காண்டாகி என்னையத் திட்ட ஆரம்பிச்சாரு. சப்போர்ட் பண்றவனுக்கே சமாதி கட்றவனப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல. பஸ்ல அங்க இங்கன்னு பிரிஞ்சி உக்காந்துட்டு இருந்த என் தோழர்கள்ல்லாம், குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க. தலைவர் கொஞ்சம் அமைதியாப் பேச ஆரம்பிச்சாரு. செத்த பாம்ப அடிக்கிறதுல நம்மாளுங்க கில்லாடிங்கறத பஸ்ல இருக்கிறவங்க மறுபடியும் நிரூபிச்சாங்க. தலைவரு அடக்கி பேச ஆரம்பிச்சவுடனே, சும்மா இருந்தவனெல்லாம் சங்கூத ஆரம்பிச்சானுங்க. பெரியவர் திட்டு வாங்கும் போதெல்லாம் சும்மா இருந்தவனுங்க, நாங்க ஒரு 5 பேர் அவருக்கு (சண்டைய நிறுத்த) சப்போர்ட் பண்ணுனதும், ஆளாளுக்கு அந்த துண்டு போட்டவர் மேல எகிற ஆரம்பிச்சிட்டானுவ. இவனுக எப்படா திருந்துவானுகன்னு நெனப்புலயும், அனாவசியமா என்னால ஒரு சண்டை பெரிசாச்சின்ற வருத்தத்துலயும் என்னோட நிறுத்தத்துல நா அப்ப எறங்கினேன்.

நம்மாளுங்களுக்கு தலைவரத் தேர்ந்தெடுக்கிறதுலதான் பிரச்சினையே. எங்க தப்பு நடந்தாலும், ரஜினிகாந்த், விஜயகாந்த், "விஜய T ராஜேந்தர்" மாதிரி ஹீரோ வந்து காப்பாத்தனும்னு நெனக்கிறாங்க. பிரச்சினைன்னா சண்டை போடாம எல்லாரும் ஒன்னா சேர்ந்து அந்த பிரச்சினைக்கு முடிவு தேடணும். இந்த ஒரு லைன கருவா வச்சி நல்ல படங்களும் இருக்கு. அதையெல்லாம் சின்னப் பசங்க படம்ன்னு சொல்லிட்டு, இவங்க "வேற" படத்த சி.டி யில பார்க்கிறாங்க (இல்ல தப்பி தவறி எப்பவாவது தியேட்டருக்கு போறாங்க).

தன் குடும்பம், தான்ன்னு கவலை படுறவங்க, மத்தவனப் பத்திக் கவலையே படுறது கெடையாது. கேட்டா," என் கவலையே எனக்கு பெருங்கவலை". சரி நீ மத்தவனப் பத்தி கவலைப் படாதே, அவனுக்கு தொல்லை கொடுக்காமயாச்சும் இரு. என்னோட உறவினர்கள்லயும் நெறைய பேர் இப்படி இருக்காங்க. ஒரு உறவினர் இருக்காரு, அவரு மட்டும் பஸ்லயோ ரயில்லயோ போகும் போது ஏறி சீட் பிடிப்பாரு, இதே இன்னொருத்தன் இவருக்கு முன்னாடியே ஏறி அப்படி சீட் பிடிச்சா சட்டமெல்லாம் பேசுவாரு, சண்டையும் வளிப்பாரு. எங்க குடும்பம் எப்பவுமே பயணத்துல சண்டை வளிக்காம பயணிச்சது கிடையாது. நான் அப்போ சின்னப் பையனா இருந்ததால எதுவும் பேச முடியாம இருந்தேன். இப்போ அவங்களையெல்லாம் விட்டு இங்க வந்து தனியா தங்கி வேலை பார்க்கிறேன்.
அட்லீஸ்ட் முதல்ல ஒரு இந்தியனா இருக்க ட்ரை பண்ணுங்க. (அதுக்காக லஞ்சம் வாங்குறவனையெல்லாம் குத்தி கொல்ல சொல்லல நான் சொன்னது இந்தியன். இந்தியன் தாத்தா இல்ல) முடிஞ்சா இந்த உலகத்தையே ஒன்னாப் பார்க்க முயற்சி செய்ங்க. எல்லாரும் மனுஷங்கதான், முடிஞ்சா மத்தவனுக்கு உதவி செய்ஞ்சு வாழ ட்ரை பண்ணுங்க. (உலகத்துல உதவுறவங்களே இல்லன்னு சொல்ல வரல இருக்காங்க ஆனா கொஞ்சம்தான்). நான் இங்க என்னோட ஆதங்கத்த சொல்லிட்டு மட்டும் போக விரும்பல. எல்லாம் மாறணும். இந்த உலகம் ஏன் இப்படி இருக்குன்னு நெனைக்கிறவனால இத மாத்த முடியாது. ஏன் இப்படி இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறவனாலதான் மாறும்.
நாமெல்லாம் ஒன்னாச் சேர்ந்தாத்தான் ஒரு நல்ல தலைவனத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போதைக்கு அது முடியாது. நெனச்சி பாருங்க "ஒட்டு மொத்த இந்தியாவே ஏத்துக்கிற ஒரு அரசியல்வாதியோ இல்ல ஒரு இந்தியனோ அட்லீஸ்ட் ஒரு மனுஷனே இந்தியால இல்ல"ங்கிறது ரொம்ப வெட்கப் படவேண்டிய விஷயம். (அப்துல் கலாம் தவிர, அவரையே எத்தனப் பேருக்கு தெரியும்னு தெரியல). ஒரு நல்ல தலைவன தேர்ந்தெடுத்தா மட்டும் போதாது......

8 comments:

ulagam sutrum valibi said...

கண்ணு,
உன் சாதி சண்டைய நான் பாக்கல குதிரைக்கு கட்டினாமாதிரி
மொழிபெயற்பு வருதான்னு பாதுக்கிட்டு இருந்துட்டேன்

ulagam sutrum valibi said...

//அவரு கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்டேன்." ஏங்க துண்டு மேல உக்காந்ததுதான் பிரச்சினைன்னா, அந்த உக்காரக் கூடாத துண்டத் தூக்கி ஏங்க உக்கார்ற இடத்துல வச்சீங்க?"ன்னேன்.//
செம ஜோக்குபா!!!எங்கிருந்து இம்புட்டு வந்துச்சு!!!!

ulagam sutrum valibi said...

//செத்த பாம்ப அடிக்கிறதுல நம்மாளுங்க கில்லாடிங்கறத பஸ்ல இருக்கிறவங்க மறுபடியும் நிரூபிச்சாங்க.//
சரிய சொன்னபோ!

ulagam sutrum valibi said...

//நம்மாளுங்களுக்கு தலைவரத் தேர்ந்தெடுக்கிறதுலதான் பிரச்சினையே. எங்க தப்பு நடந்தாலும், ரஜினிகாந்த், விஜயகாந்த், "விஜய T ராஜேந்தர்" மாதிரி ஹீரோ வந்து காப்பாத்தனும்னு நெனக்கிறாங்க.//
குமுதத்துக்கு ஒரு ஆப்பா??

ulagam sutrum valibi said...

//அப்துல் கலாம் தவிர, அவரையே எத்தனப் பேருக்கு தெரியும்னு தெரியல)
அவரு உண்மையான தமிழ் குடிமகன் கண்ணு.

செந்தில் said...

//குமுதத்துக்கு ஒரு ஆப்பா??//
யாருக்கும் ஆப்பு வக்கினுன்ற ஆசையில்ல எனெக்கு... தோணினத எழுதினேன்..

//செம ஜோக்குபா!!!எங்கிருந்து இம்புட்டு வந்துச்சு!!!!//
ஏங்க! நான் ஜோக்குன்னு போட்ட பதிவுக்கெல்லாம் சிரிக்கலை, சரி போனாப் போதுன்னு சீரியசாப் போட்டா சிரிக்கிறீங்க!!! ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்....

//அவரு உண்மையான தமிழ் குடிமகன் கண்ணு.//
அது எனக்கு நல்லாவேத் தெரியும் பாட்டி. அதனாலத்தானே கடைசில அவரோடப் பேரப் போட்டேன். நல்லவங்க எப்பவுமே முடிவுல அறியப் படுறாங்க...(தத்துவம் நம்பர்: 1988) :)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "வாலிபி பாட்டி." (எங்கியோ லாஜிக் உதைக்குதே),

ulagam sutrum valibi said...

லாஜிகிக்-எம்ஜிஆர் அந்த வயசுல உலகம் சுற்றும் வாலிபன்னு ஒத்துகிட்டப -ஏன் நான் இந்த வயசுல உலகம் சுற்றும் வாலிபின்னு சொல்ல கூடாது???

செந்தில் said...

சர்தானுங்கோவ்...