Saturday, 23 February 2008

கவுண்டர் பெல் கலக்கும் மாடர்ன் பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி...

டிஸ்கி: Mail Forward-ல வந்தது... உங்களுக்கும் வந்திருக்கலாம், இருந்தாலும் தமிழ்ல படிச்சாதானே எஃபெக்டே... :)

"ஆல் இன் ஆல் அக்கொளண்ட் மேனேஜர் கவுண்டர் பெல்", அப்படினு ஒரு போர்டு. அப்படியே கேமராவை கீழ இறக்கி, ரூமுக்குள்ள ஜூம் பண்ணா, நம்ம கவுண்டர் மவுஸை தேய்ச்சிக்க்கிட்டே மானிட்டருக்குள்ள மண்டைய உட்டு உன்னிப்பா கால் பந்து மேட்ச் பார்க்கிற மாதிரி கவனிக்கிறாரு.


அப்போ எண்ட்ரி தர்றாரு, தேங்கா சுரண்டி செந்தில், இனி நடக்கிற கூத்தை நீங்களே பாருங்கோ...



செந்தில்: அண்ணே! என்னண்ணே பண்றீங்க...?


கவுண்டர் பெல்: வாடா கமர்கட்டு தலயா... டேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த HMS ப்ராஜெக்ட் டெலிவரிக்கு போக போகுது, லட்ச ரூவா கெடைக்கும். அதான் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்கேன்.


செந்தில்: அண்ணே, என் சந்தேகத்தை தீத்து வைங்கண்ணே...


க.பெ: ஆஹ்... அப்படிக் கேளு, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர் வேணும்ன்றது. என்னடா உன் சந்தேகம்..?


செ: இந்த HMS ப்ராஜெக்ட் எப்படிண்ணே வேலை செய்யிது?


க. பெ: அடேய் கோமுட்டித் தலையா! இதோ இருக்க்கு பார்த்தியா?, இதுக்கு பேருதான் Eclipse... (ஆரம்பிச்ச கவுண்டரு Flow-அ செந்திலுக்கு விவரமா எடுத்து சொல்றாரு... ஒரு அரை மணி நேர explanation-க்கு பிறகு...)


"இதுல எப்படிண்ணே ரன் ஆகும்..? போங்கண்ணே"-னு சொல்ற செந்தில் Shift-ஐயும் Del button-ஐயும் அமுக்கிடறாரு... Project Screen, Blank ஆகிடுது...


செந்தில்: என்னண்னே அதுக்குள்ள Delete பண்ணிட்டீங்க... Full-ஆ சொல்லித்தாங்கண்ணே...


க.பெ: ???$#%#*


அப்போ பார்த்து அங்க வர்ற ஒரு புது Client, "ஏன்ங்க இங்க All In All Account Manager-ங்கிறது யாருங்க?"


செந்தில்: இதோ, இவருதான்....


க.பெ: டாய்... யெஸ் ஐ ஆம் ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர்.


Client: சாயங்காலம் ப்ராஜெக்ட் டெலிவரி தரணும், அதுக்கு HMS ப்ரொஜெக்ட் வேணும்...


க.பெ: HMS ப்ராஜெக்டே வேணுமா?


Client: ஆமாங்க...


க.பெ: ஏன் இந்த ரெயில் வே ரிசர்வேஷன், லைப்ரெரி ஆட்டோமேஷன் எல்லாம் வேண்டாமா?


Client: ரெயில் வே ரிசர்வேஷனா? அய்யோ அதெல்லாம் வேண்டாங்க...


க.பெ: அப்போ HMS ப்ராஜெக்ட் எல்லாம் இல்ல..


Client: ஏங்க...?


க.பெ: க்ராப் வெட்டியிருக்க Client-க்கு எல்லாம் HMS ப்ராஜெக்ட் கொடுக்குறது கெடையாது...


Cleint: &#^%$$$&^#%*...


கவுண்ட மணி திரும்பி பார்க்கும் போது, காம்பௌண்ட் சுவரை தாண்டி குதிச்சு செந்தில் ஓடி போறாரு. கவுண்டரு கொஞ்சம் எந்திருச்சி வந்து பால்கனில நின்னு பார்க்குறாரு...தெரு முனைல இருக்குற கோவில்ல ஒரு ஆளு சிதறு தேங்கா உடைச்சிட்டு இருக்காரு...

Thursday, 14 February 2008

காதல் கவுஜ... (காதலர் தினமாம்ல அதான்...)

செருப்பைக் கழற்றி விட்டு

ஏறினாள் என்னவள்,

கோவிலாகியது...

எடை பார்க்கும் எந்திரம்.

"பிரசாதத்தின் மதிப்பு நூறு பைசா"







நானும் பல நாளா யோசிச்சு பார்த்தேன், என்னத்தடா பதியறதுன்னு.

நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போக ரெயில் வே ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு வெயிட் பார்க்கிறதப் பார்த்த உடனே (பெரிய கவிப் புலவர் மாதிரி) மனசுக்குள்ள சில பல கவுஜ ஊத்தோ ஊத்துனு ஊத்துச்சு... :)

அதுல ஒரு சுமாரான கவுஜதான் இது. என்னோட முதல் கவுஜயும் கூட...

சி வி ஆர் அண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், இனி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, நல்ல பதிவுகளை முடிந்த வரை போட முயற்சிப்போம்.

பின் குறிப்பு:- இந்த காதல் கவுஜ "இன்னிக்கு காதல் கவுஜர்கள் தொல்லை தாங்கல சாமிகளா...... :(" என்று குரல் கொடுத்த "ராம்" அண்ணனுக்கு சமர்ப்பணம்... :)

அதே பழைய அன்புடன்...

களவாணி.