Showing posts with label லொள்ளு. Show all posts
Showing posts with label லொள்ளு. Show all posts

Saturday, 23 February 2008

கவுண்டர் பெல் கலக்கும் மாடர்ன் பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி...

டிஸ்கி: Mail Forward-ல வந்தது... உங்களுக்கும் வந்திருக்கலாம், இருந்தாலும் தமிழ்ல படிச்சாதானே எஃபெக்டே... :)

"ஆல் இன் ஆல் அக்கொளண்ட் மேனேஜர் கவுண்டர் பெல்", அப்படினு ஒரு போர்டு. அப்படியே கேமராவை கீழ இறக்கி, ரூமுக்குள்ள ஜூம் பண்ணா, நம்ம கவுண்டர் மவுஸை தேய்ச்சிக்க்கிட்டே மானிட்டருக்குள்ள மண்டைய உட்டு உன்னிப்பா கால் பந்து மேட்ச் பார்க்கிற மாதிரி கவனிக்கிறாரு.


அப்போ எண்ட்ரி தர்றாரு, தேங்கா சுரண்டி செந்தில், இனி நடக்கிற கூத்தை நீங்களே பாருங்கோ...



செந்தில்: அண்ணே! என்னண்ணே பண்றீங்க...?


கவுண்டர் பெல்: வாடா கமர்கட்டு தலயா... டேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த HMS ப்ராஜெக்ட் டெலிவரிக்கு போக போகுது, லட்ச ரூவா கெடைக்கும். அதான் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்கேன்.


செந்தில்: அண்ணே, என் சந்தேகத்தை தீத்து வைங்கண்ணே...


க.பெ: ஆஹ்... அப்படிக் கேளு, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர் வேணும்ன்றது. என்னடா உன் சந்தேகம்..?


செ: இந்த HMS ப்ராஜெக்ட் எப்படிண்ணே வேலை செய்யிது?


க. பெ: அடேய் கோமுட்டித் தலையா! இதோ இருக்க்கு பார்த்தியா?, இதுக்கு பேருதான் Eclipse... (ஆரம்பிச்ச கவுண்டரு Flow-அ செந்திலுக்கு விவரமா எடுத்து சொல்றாரு... ஒரு அரை மணி நேர explanation-க்கு பிறகு...)


"இதுல எப்படிண்ணே ரன் ஆகும்..? போங்கண்ணே"-னு சொல்ற செந்தில் Shift-ஐயும் Del button-ஐயும் அமுக்கிடறாரு... Project Screen, Blank ஆகிடுது...


செந்தில்: என்னண்னே அதுக்குள்ள Delete பண்ணிட்டீங்க... Full-ஆ சொல்லித்தாங்கண்ணே...


க.பெ: ???$#%#*


அப்போ பார்த்து அங்க வர்ற ஒரு புது Client, "ஏன்ங்க இங்க All In All Account Manager-ங்கிறது யாருங்க?"


செந்தில்: இதோ, இவருதான்....


க.பெ: டாய்... யெஸ் ஐ ஆம் ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர்.


Client: சாயங்காலம் ப்ராஜெக்ட் டெலிவரி தரணும், அதுக்கு HMS ப்ரொஜெக்ட் வேணும்...


க.பெ: HMS ப்ராஜெக்டே வேணுமா?


Client: ஆமாங்க...


க.பெ: ஏன் இந்த ரெயில் வே ரிசர்வேஷன், லைப்ரெரி ஆட்டோமேஷன் எல்லாம் வேண்டாமா?


Client: ரெயில் வே ரிசர்வேஷனா? அய்யோ அதெல்லாம் வேண்டாங்க...


க.பெ: அப்போ HMS ப்ராஜெக்ட் எல்லாம் இல்ல..


Client: ஏங்க...?


க.பெ: க்ராப் வெட்டியிருக்க Client-க்கு எல்லாம் HMS ப்ராஜெக்ட் கொடுக்குறது கெடையாது...


Cleint: &#^%$$$&^#%*...


கவுண்ட மணி திரும்பி பார்க்கும் போது, காம்பௌண்ட் சுவரை தாண்டி குதிச்சு செந்தில் ஓடி போறாரு. கவுண்டரு கொஞ்சம் எந்திருச்சி வந்து பால்கனில நின்னு பார்க்குறாரு...தெரு முனைல இருக்குற கோவில்ல ஒரு ஆளு சிதறு தேங்கா உடைச்சிட்டு இருக்காரு...

Tuesday, 22 May 2007

லிஃப்ட்டில் செய்யக் கூடாதவை...

இது ஒரு 'டோண்ட் டு' பதிவு. இதுல இருக்கிறத படிச்சிட்டு உங்க ஆபிஸ் லிஃப்ட்லயோ இல்ல அப்பார்ட்மென்ட் லிஃப்ட்லயோ பண்ணி வம்புல மாட்டினா களவாணி பொறுப்பல்ல.

1. நாய் மாதிரி முகத்த கோபமா வச்சிக்கிட்டு, "கர்ர்ர்ர்..."ன்னு சவுண்ட் கொடுத்துக்கிட்டே, திடீர்ன்னு பக்கத்துல இருக்குறவன் மூஞ்சி கிட்ட போய் "வள்"ன்னு குரைக்கிறது.

2. பட்டனை அமுக்கிட்டு ஷாக் அடிச்ச மாதிரி "ஆஆஆஆ....."ன்னு கத்திட்டு அசடு வழிஞ்சிட்டே அடுத்தவன பட்டன அமுக்க சொல்றது.

3. பக்கத்துல இருக்கவன் கிட்ட, "என்னால நாலனாவ என் மூக்குக்குள்ள விட முடியும். உன்னால முடியுமா?"ன்னு சவால் விடுறது.

4. ஒவ்வொரு தடவை லிஃப்ட் கதவு திறக்கும் போதும் "டிங்"ன்னு வாயில மணியடிக்கிற சவுண்டு தர்றது.

5. லிஃப்ட் கதவு ஒவ்வொரு தடவை மூடும் போதும், புதுசா வந்தவன் கிட்ட, "கவலை படாதீங்க. கதவு கண்டிப்பா திறக்கும்"ன்னு சொல்லிட்டு பிரார்த்தனை பண்றது.

6. பக்கத்துல இருக்கிறவனை குழப்பமா முறைச்சிப் பார்த்துட்டே இருந்துட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு பயந்து பின்னாடி போய் "அவனா நீயி?"ன்னு கத்துறது

7. கூட வர்றவங்க கிட்ட லிஃப்ட்ட யூஸ் பண்றதுக்கு வரி கட்ட சொல்லி காசு கேட்கிறது.

8. லிஃப்ட் மேல போகும் போது "டமால்"ன்னு கீழே உக்கார்ந்துட்டு, நின்னவுடனே எழுந்து கோக்கு மாக்கான் மாதிரி தலைய சொறிஞ்சுகிட்டே முழிக்கிறது.

9. லிஃப்ட் ஓரத்துல பயந்துகிட்டே நிக்கிறது.

10. லிஃப்ட்டுகுள்ள வர்றவங்களையும், போறவங்களையும் கை தட்டி வழியனுப்புறது

11. லிஃப்ட் சுவத்துல காதை வச்சி வித்தியாசமான சவுண்ட் கொடுத்துகிட்டே கேட்கிறது.

12. மத்தவங்களையும் காதை வச்சி கேட்க சொல்றது.

13. யாராவது லிஃப்ட்டுக்குள்ள நுழையும் போது, செத்துப் போன மாதிரி கீழ படுத்து கிடக்கிறது.

14. "இந்த பட்டன் எதுக்குன்னே தெரியல"ன்னு சொல்லிகிட்டே சிவப்பு கலர் பட்டனை அமுக்குறது

15. ஒரு வட்டத்துக்குள்ள நடக்கிறது. யாரையாவது இடிச்சிட்டா ரோபோ மாதிரி அடுத்த டைரக்ஷன்ல திரும்பி நடக்கிறது.

16. ஒரு கூலிங் கிளாஸ போட்டுக்கிட்டு வந்துட்டு, அடுத்தவன மேலயும் கீழயும் பாக்குறது. கேட்டா "இது எக்ஸ்-ரே க்ளாஸ்"ன்னு சொல்றது

17. லிஃப்ட் கதவு மூடினவுடனே, "என்னிய வெளிய விடுங்க"ன்னு கத்திக்கிட்டே கதவத் தட்டுறது

18. மூக்கை முன் பக்கமா தூக்கி பன்னி மாதிரி எல்லார் கிட்டயும் காட்டுறது.

19. அடிக்கடி "மியாவ்" கத்துறது, "ஊஊஊ"ன்னு ஊளை விடுறது

20. யாராச்சும் பட்டனை அழுத்துற நேரத்துல "டமால்"ன்னு சவுண்ட் தர்றது.

21. லிஃப்ட்டுக்குள்ள மிட்டாய் விக்கிறது.

22. லிஃப்ட்ல தனியா இருக்குற ஆள் மண்டைல அடிச்சிட்டு "நான் அடிக்கலை"ன்னு சொல்றது.

23. லிஃப்ட்டுக்குள்ள சத்தமா "கடவுளே இன்னும் 2 நிமிஷத்துக்கு குண்டு வெடிக்கக் கூடாது"ன்னு கண்ணை மூடிக்கிட்டே ப்ரார்த்தனை பண்றது.

24. லிஃப்ட்டுக்குள்ள தலைகீழா நிக்கிறது

25. லிஃப்ட் சுவத்துல கண்ணாடி இருந்தா அதையே, லிஃப்ட்ட விட்டு இறங்காம வித்தியாசமா பார்க்கிறது.

26. ஒரு டப்பாவ லிஃப்ட் ஓரத்துல வச்சிட்டு, வர்றவங்க கிட்டயெல்லாம் "டிக்.. டிக்..ன்னு சவுண்ட் கேட்குதா?"ன்னு கேட்குறது.

27. லிஃப்ட்டுக்குள்ள பக்கத்துல இருக்கிறவங்களையெல்லாம் ஃபோட்டோ புடிக்கிற மாதிரி ஆக்ஷன் காட்டுறது, இல்ல மெய்யாலுமே ஃபோட்டோ புடிக்கிறது.

28. லிஃப்ட்டு தரையில சாக்பீஸால ஒரு கட்டம் போட்டுட்டு சக பயணிகள் கிட்ட "இது என்னோட எடம்"ன்னு சொல்றது

29. லிஃப்டுக்குள்ள வர்றவங்க கிட்ட "எந்த மாடிக்கு போகணும்?"ன்னு கேட்டுட்டு தப்பான பட்டனை அழுத்துறது

30. டிஸ்ஷ்யூ பேப்பர்-ல மூக்க சிந்திட்டு, அதை அடுத்தவன் கிட்ட காட்டுறது

31. பக்கத்துல இருக்குறவன் மூஞ்சி கிட்ட சின்ன கடிகாரத்த காட்டி, " நீங்க தூங்குறீங்க, நீங்க தூங்குறீங்க,"ன்னு அவனை ஹிப்னாடிஸம் பண்ண முயற்ச்சிக்கிறது

32. பக்கத்துல இருக்குறவன் கிட்ட "நீங்க இன்னிக்கு சாப்பாட்டுக்கு தொட்டுக்க என்ன கொண்டு வந்தீங்க?"ன்னு கேக்குறது.

33. ஏதாவது ஹெல்ப்-லைனுக்கு ஃபோன் பண்ணி, "நான் இப்போ எத்தினாவது மாடில இருக்குறேன்?"ன்னு கேட்குறது.

33. "உங்கள் சாய்ஸ்"க்கு ஃபோன் பண்ணி, "உமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இன்னா சோப் போட்டு குளிக்கிறீங்க? எனக்கு "அன்னியன்" லயிருந்து அண்டங்காக்கா பாட்டு போடுவீங்க"ன்னு சொல்றது. கூடவே, "லிஃப்ட்ல என் பக்கத்துல கேனை மாதிரி என்னையே ஒருத்தர் பாத்துக்கிட்டு இருக்காரு. அவருக்கு இந்த பாட்ட டெடிக்கேட் பண்றேன். என்னது அவருகிட்ட பேசணுமா?"ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்குறவன் கிட்ட ஃபோனத் தர்றது.

கடைசியா,

35. பக்கத்துல இருக்குறவன் கிட்ட, "அந்த கேபிள் அறுந்த சத்தம் கேட்டுதா?"ன்னு பயந்துகிட்டே கேட்கிறது.

டிஸ்கி: தப்பித் தவறி இந்தப் பதிவ படிச்சவங்க, இதே மாதிரி லிஃப்ட்ல செய்யக் கூடாத "டோண்டு"க்களை பின்னூட்டம் வழியா எழுதுங்க ப்ளீஸ்... நன்றி.

Thursday, 12 April 2007

கட் அடிக்கலாம் வாங்க...

தலைப்ப பார்த்துட்டு எவனாவது, "வாடா மச்சா... செந்தில் அண்ணே கட் அடிக்க சொல்லித் தராரு"ன்னு தப்பா உள்ள பூந்திங்கண்ணா, 'யு' டர்ன் போட்டு திரும்பிப் பார்க்காமலே எஸ்-ஆயிடுங்க... இது "கட் அடிப்பது எப்படி"ன்ற பதிவு இல்லடா மச்சி...

நான் வழக்கம் போல ஏழாப்பு படிக்கும்போதுன்னு நெனைக்கிறேன். நல்லாப் படிக்குற பயதானே தவிர அறாத வாலு நான் எங்க ஸ்கூல்ல.(ஒங்க பேர்ல ஸ்கூல்லாம் இருந்த்தான்னு ஓல்ட் மொக்கையெல்லாம் போடப் படாது.) இப்ப ஒக்கார்ந்து இவ்ளோ டைப் பண்றேன், அப்ப்ல்லாம் ஸ்கூல்ல ஹோம் வொர்க் செய்யிறது கெடயாது, மச்சான் களையும் செய்ய விட்டதில்ல. ரெக்கார்ட் நோட்டு எழுதவே மாட்டேன். ஆறாவது ரெக்கார்ட் நோட்ட சன் டி.வி.-ல போட்ற "புத்தம் புதுசா" வச்சி பத்தாம் வகுப்புல யூஸ் பண்ணினத அதுல ரைட் போட்ட பத்தாப்பு வாத்தியாராலயே கண்டுபிடிக்க முடியல. நான் முதல்ல எழுதின ரெகார்டே பத்தாப்புலதான். வருஷா வருஷம் நோட்டு புக்கெல்லாம் வாங்கினவுடனே, அதுக்கு ட்ரெஸ் (ப்ரௌன் ஷீட்) பண்ணி பொட்டு வச்சி (லேபிள் ஒட்டி) திருஷ்ட்டி பொட்டும் வச்சி (அவய்ங்க பேரு லேபிலிள்), அழுக்கு பண்ற பயகளைப் பார்த்து இருப்பீங்க. ஆனா நான் அத அப்படியே வச்சி அடுத்த வருஷம் ஜூனியர் பசங்களுக்கு வித்துருவேன். ஏன்னா அவங்களுக்கு சப்ஜெட்டுக்கு ஒரு ரெகார்ட் பத்தாதாம்.அதுக்காகத்தான் நான் என் ரெகார்டக்கூட எழுதாம என்னோடத அவங்களுக்கு கொடுத்து வந்தேன்.எவ்வளவு நல்லவன் நான் இல்ல

திரும்ப ஏழாப்புக்குள்ள பூறுவோம். அன்னிக்கு முன்தின நாள், அறிவியல் வாத்தியார்,"நாளைக்கு வரும்போது எல்லாவனும் சயின்ஸ் ரெகார்ட எடுத்து வந்து ஸைன் வாங்கணும்"ன்னு சொல்லிட்டு போனாரு. (ஸைன் வாங்குறதுனாலதான் அதுக்கு சயின்ஸ்ன்னு பேரா? இந்த ஆராய்ச்சிய நாம அப்புறம் பார்க்கலாம்)...அவரு போனவுடனே (நல்லா படிக்குற எம்மேல பொறாமை கொண்ட) தோழர்கள் அடிச்ச கமென்ட்டுகள்,

1) நாளைக்கு செந்திலுக்கு ஆப்புடா.

2) செந்தில் நாளைக்கு புட்டத்த நல்ல தேத்திட்டு வாடா.(எங்க சயின்ஸ் வாத்தியாரோட ஸ்பெஷல் மசாலாவே, தப்பு பண்ணினதா தெரிஞ்சா பெஞ்சுக்கு கீழே குனியச்சொல்லி கும்மியடிச்சு (பிரம்பால) புட்டத்த பழுக்கடிச்சுருவாரு)

ஆனாலும் நான் ரொம்ப கூலாத்தான் இருந்தேன். நான் அடி வாங்கப் போரத நெனச்சி பயக அட்டகாசம் பண்ணாங்க. ஆனா மறுநாள் எல்லாமே உல்டாவாச்சு. அன்னிக்கு மதியம் வரைக்கும் எப்படி எஸ்ஸாகலாம்ன்னு மனசுக்குள்ளவே ப்ளான் போட்டுட்டு இருந்தேன். அன்னிக்குன்னு பார்த்து மூணாவது மாடில கட்டுரைப் போட்டி நடந்துண்டு இருந்துச்சு. மதியத்துக்கு மேல சயின்ஸ் க்ளாஸ கட்டடிச்சுட்டு கட்டுரைப் போட்டிக்கு எஸ்ஸாயிட்டேன். (தனியாத்தான்), தப்பு பண்ணும்போது கூட்டு, பொரியல்லாம் வச்சுக்கக்கூடாதுங்கறது என் கொள்கை. ரொம்ப நல்ல கொள்கை. இங்க கிருக்குற மாதிரி அங்கயும் கிறுக்கி ஆண்டு விழாவுல மூணாவது பரிசு வாங்கினேன். பயக செம காண்டுல இருந்தானுங்க,"பரதேசி நாயி, ரெகார்ட்ல எஸ் ஆனது மட்டும் இல்லாம, கட்டுரைப் போட்டில தேர்ட் ப்ரைஸ் வேற இவனுக்கு."

அதவிடக் கொடுமை அதே ஆண்டு விழாவுல எப்பவுமே நான் வாங்குற நல்லொழுக்க மாணவனுக்கான பரிசும் எனக்குதான். அதுக்கு காரணம் எங்க தமிழ் வாத்தியார், ஸ்கூல்ல இருக்குர ஒரே நல்லொழுக்க மாணவனைத் தேர்ந்தெடுக்கறது அவர்தான்ங்கறது, எங்க ஸ்கூல்லயே என்னைத் தவிர எந்த மாண்புமிகு மாணவனுக்கும் தெரியாத சிகரெட் ச்சீ சீக்ரெட். இதக் கண்டுபிடிக்கப் போட்ட பல திட்டங்கள்ல தோற்றாலும் சிம்பு மாதிரி இல்ல சிம்பு சொல்ற மாதிரி கடைசில ஜெயிச்சது என்னோட விடா முயற்சிதான். இத்ல இன்னொரு கொடுமை (வழுக்கையே ச்சீ வாழ்க்கையே கொடுமைதானய்யா), அவருதான் அந்த "செலக்டட் ஒன்"ஐத் தேர்ந்தெடுக்குறார்ன்னு தெரியாம மற்ற மாணவர்கள்லாம் அவர சீண்டி சொறிஞ்சு ரத்தம் பார்த்துக்கிட்டு இருந்தானுங்க அந்த முட்டாப் பயக.

எல்லா வாத்தியாரையுமே பட்டப்பேரிட்டு கூப்ட்டு சுண்ணாம்பு போட்டு சொறியுற நான் அவருகிட்ட மட்டும் பவ்யமா பம்முறத எந்த மானங்கெட்ட மாணவனும் கண்டுக்கல. அது எனக்கு நல்லதாப் போச்சி. தொடர்த்து 5 வருஷம் (6 - 10 ம் வகுப்பு) நல்லொழுக்க மாணவன்ற ரெகார்ட அந்த ஸ்கூல்ல இனி யாராலும் ஒடைக்க முடியாது.

அது ஒன்னுதான் நான் ஒழுங்காப் பண்ண ரெகார்ட். இதுலேர்ந்தே புரிஞ்சுக்கோங்க மக்கா, எவனும் கரணமில்லாம யார்கிட்டெயும் பம்ம மாட்டானுங்க. இந்த இடத்துல ஒரு தொடரும் டயலாக் போடணுமே.

ம்ம்ம்... இதுதான் நீங்கள் பம்ம வேண்டிய இரகசியம்...(சத்குரு ஜக்கி வாசுதேவ்-வோட தொடரும் டயலாக்). நாந்தான் களவானியாச்சுங்களே?!!!

Wednesday, 11 April 2007

ஞாபகம் வருதே...

என்னோட சின்ன வயசுல நடந்த சில காமெடியான சம்பவங்கள். இதெல்லாம் மொக்கை இல்லீங்க நானே மெய்யாலுமே அறியாத வயசுல தெரியாம பண்ண காமெடிகள்.

ஒரு 5 வயசு இருக்கும்... ஸ்கூல் விட்டு வந்தா பய வீட்டுல கபடி விளையாடி வீட்டுக்காரம்மாவோட சண்டை வளிச்சி விடுறாண்ட்டு எங்கம்மா ப்ரைவேட் (அதாவது ட்யூஷன் ) -ல சேர்த்தாங்க.

ட்யூஷன் -ல முதல் நாள் சார் என்னை கூப்புட்டு, என் ஸ்லேட்-ல கீழ இருக்குர மாதிரி எழுதி பெருக்கல் கணக்கு போடச் சொன்னாரு.

12x12
-------
_____

நான் அவரு கிட்ட ஸ்லேட்ட திருப்பி கொடுத்து, எங்க டீச்சர் இப்படிப் போடத்தான் சொல்லிக் கொடுந்தாங்கண்னு கீழ இருக்குர மாதிரி திருப்பி எழுதிக் காட்டினேன்.

12
x12
----
----
மனுஷன் டென்ஷனாகி, "ரெண்டுமே ஒன்னுதாம்ப்பா தம்பி"ன்னு சொல்லி ஒரு மணி நேரம், எப்படி செய்யணும்னு விளக்கம் கொடுத்தாரு.

அதப்பத்தி என் நண்பன்ட்ட பெருமையா வேற சொன்னேன்.."இன்தாளுக்கு பெருக்கல் கணக்கு கூடத் தெரியலடா மச்சான்".

மறுநாள் சாயந்திரம், அதே சார் என்னய கூப்ட்டு என்னோட கற்பழியாத ஹோம் வொர்க் நோட்-ல முதல் பக்கத்துல என் பேரை எழுதி, 3-ம் பக்கம் டாப்-ல க முதல் ன வரை எழுதனுங்கிறதுக்காக "க to ன"ன்னு எழுதினாரு.

என் திமிரு நான் வீட்ல போயி எல்லார்க்கிட்டேயும், என்னோட முதல் ஹோம் வொர்க்கை காட்டிட்டு எழுத உக்காந்தேன். மறுநாள் அவருகிட்ட காட்டும் போது எமகாதகப் பய இன்னிக்கு என்னத்தக் காட்டப் போரானோங்கற மாதிரி என்னய மொறைச்சிக்கிட்டே என் கைல இருக்கிற நோட்ட வாங்கிப் பார்த்துட்டு நொந்துப் போய்ட்டாரு பாவம். நான் எழுதி இருந்தது,

க to ன
க to ன
க to ன
க to ன

அவரு எழுதினத அப்படியே...

எனக்கு அப்ப english எல்லாம் தெரியாது, நானே கார்ப்பரேஷன் ஸ்கோல் பய எனக்குத் தெரிஞ்சத புரிஞ்த எழுதி வச்சேன்...

மறு நாளும் என் ரூபத்திலேதான் அவருக்கு 7.5 சனி...

என்னய கூப்பிட்டு ஆனா.. ஆவன்னா... தெரியுமாடா செந்தில்,ன்னார்
நான், "தெரியாது சார் எனக்கு தெரிஞ்சது அ.ஆ.இ.ஈ"ன்னேன் கூலாக.

மனுஷன் நொந்து நூலாகி, வெந்து நூடுல்ஸ் ஆகி, என்னய அந்த குட்டி ட்யுஷன்லேயே இன்னொரு டெபார்ட்மென்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டார்...

தொடரும் எனது அலுசாட்சியம்....