இந்த பதிவில இருந்து புதுசா ஒரு தொடர் (எது மாதிரியும் அல்லாத புது மாதிரியா-ல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான்...) தொடங்கலாம்னு தோணுச்சி. தொடக்க உரை எல்லாம் கொடுத்து போர் அடிக்காம, Let's go to the Subject....
கொஞ்ச நாளாவே நிறைய கேள்விகள், என் தம்மாத்தூண்டு மூளையப் போட்டு குடைஞ்சிட்டு இருந்துச்சு... அதெல்லாம் என்னன்னா,
பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு, மனுஷங்களா வெளி உலக வாசிகளா, இல்ல இங்கே கட்டி வச்சிட்டு வெளி "உலகத்துக்கு" அதாவது கோள்களுக்கு ஷிப்ட் ஆனவங்களா? ஏன் கட்டுனாங்க? எப்படி கட்டுனாங்க? (வேலை இல்லாம சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா இப்படித்தான் கோகு மாக்கா யோசிக்கத் தோணுமாம்) இப்படி ஒரு கேள்விக்கு பதிலை தேடி போய் பல கேள்விகள் தொடங்கிருச்சு.இந்த கேள்விகளுக்கு பதில் தேடி சைட் விட்டு சைட் (Sight இல்ல... Site) தாவுனதுல பல முரண்பாடான பதில்கள். அவற்றில் பல உங்கள் பார்வைக்கு...
Subject-குள்ள போறதுக்கு முன்னாடி எகிப்தியர்கள் பத்தியும் அவங்க கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா, மேற்படி வர்ற விஷயங்களை நாம ஈஸியா புரிஞ்சுக்க முடியும்.
எகிப்திய ராஜாங்கம் மற்றும் நம்பிக்கை.
2575 கி.மு. -2150 கி.மு. இந்த காலப் பகுதி "Old Kingdom"னு அழைக்கப் படுது. இந்த Old Kingdom-ல தான் Pharaoh-க்கள் (அதாவது எகிப்திய மன்னர்கள், Pronounce: "Fair-row"), நைல் நதியால வளமா இருக்க நைல் பள்ளத் தாக்குல ஒரு நிலையான மத்திய அரசை நியமிச்சாங்க. (நம்மால ஒரு நிலையான மத்திய அரசை என்ன மாநில அரசைக் கூட நியமிக்க முடியாதுங்கறீங்களா??? நாம எகிப்தியர்கள் இல்லீங்க...) இந்த மன்னர்களோட கடைசி ஆசைக்காக, அவங்க உடலை இறப்புக்கப்புறம் பாதுகாக்க இந்த பிரமிடுகளும், பிற கல்லறைகளும் கட்டப் பட்டிருக்கலாம்.
"உடல் (Body), பா (Ba), கா (ka) எனும் மூன்று மூலகங்களால் (elements) பிணைக்கப் பட்டவன் மனிதன்"-னு எகிப்தியர்கள் நம்பினாங்க.
மனிதனா பிறந்த எல்லாருக்குமே உடல்-னு ஒன்னு இருக்கும் (யாருங்க அது அப்படியானு வாயைப் பிளக்குறது???!!!). இது ஒருத்தர்லேருந்து இன்னொருத்தர்க்கு வேறுபடும். உடல் வளர்ச்சி அடைறதை அவங்க "Making Changes"-னு சொன்னங்க. மரணம்தான் உடலின் கடைசி மாற்றமாக அமைவது.
இதே போல ஒவ்வொரு மனிதருக்கும், Ba னு ஒன்னு இருக்கு. நம்ம உடல் மாதிரியே இந்த Ba-வும் ஒருத்தருகொருத்தர் வேறுபட்டாலும், இது உடலோடு சம்பந்தப் பட்டது கிடையாது (அதாவது கண்ணுக்கு தெரியாத ஒன்னு). இதை ஆங்கிலத்துல "manifestation"னு சொல்லலாம், அதாவது "வார்த்தைகளை பிரயோகிக்காம வெளிப்படுத்துதல்". இன்னும் விளக்கமா சொல்லனும்னா "ஒவ்வொருவருக்கும் வேறுபடும் உடல் அல்லாதவையே இந்த Ba". உதாரணத்துக்கு கிட்டத்தட்ட "Personality, Character" மாதிரி. இந்த மனித உடலோட இருக்க பறவை தோற்றம் Ba-வை குறிப்பதுதான்.
ka, இதை ஆங்கிலம் பன்மை-ல "sustenance" சொல்லலாம். அதாவது சக்தி கொடுக்குற ஒரு Source மாதிரி. இதுவும் Ba மாதிரி கண்ணுக்கு தெரியறது இல்ல, ஆனா உடலுக்கும் இதுக்கும் ஒரு Connection இருக்கு. இறந்தவரோட ka-வுக்கு எகிப்தியர்கள் உணவு கொண்டு படைக்கவும் செஞ்சிருக்காங்க, ஆனா ka ஆன்மா மாதிரி கண்ணுக்கு தெரியாத ஒன்னு-ன்றதால, அந்த உணவு இறந்த உடலுக்கு பாதுகாப்பு தரக் கூடியதாகத்தான் அந்த படையல் படைக்கப் பட்டிருக்கு.
இப்போ நம்ம "கதை"ல வரப் போர சில கேரக்டர்கள் பத்தி முன்னமே பார்த்திடுவோம்...
முதல்ல, "ஒஸைரிஸ்" (Osiris, The God of Death). இவர் பூமி கடவுளின் தலைமகன். இறப்பு மட்டுமில்லாம பிறப்பு மற்றும் ஆண்மைக்கும் இவர்தான் கடவுள்.
அடுத்த கடவுள், ரா (Ra). இவர் சூரிய கடவுள்.
அடுத்த கடவுள், ஹோரஸ் (Horus). இவர் கடவுள் ஒஸைரிஸின் மகன். இவர் சொர்க்கத்தின் கடவுள், மற்றும் சூரியக் கடவுளின் காவலர்.
Introduction முடிச்சாச்சு, இப்போ மேட்டருக்கு வருவோம்... ஆட்சியில் இருக்கும் pharaoh இறந்த பிறகு கடவுள் ஒஸைரிஸ்-ஆக மாறி விடுகிறார்கள்-னு எகிப்தியர்கள்நம்பினாங்க. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வர்ற Pharaoh கடவுள் ஹோரஸ் ஆகிடுவாரு. இது ஒரு Cycle மாதிரி. இப்படி, ஒருவர் இறந்த பிறகு Ka-உம் Ba-உம் உடலை விட்டு பிரிக்கப்பட்டு விடும். அதனால அந்த இரண்டுக்குமே இறப்பு கிடையாது. Ka-வையும் Ba-வையும், அடுத்த உலகத்துக்கு வழியனுப்ப எகிப்தியர்கள் "Opening of the Mouth"னு சடங்கை செஞ்சுட்டு வந்தாங்க. இதுக்கப்புறம்தான் நாம முன்னமே பார்த்த மாதிரி Ka-க்கு படையல் கூட வைப்பாங்க.
இப்படி பாதாள உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Ka, திரும்ப வந்து தன் உடலோட சேரணும், அப்படி சேரும் பட்சத்தில் அது அதற்கடுத்த உலகமான, தெய்வலோகத்துக்கு, கடவுள்களோட வாழ்றதுக்காக அனுப்பி வைக்கப் படும். மனிதன் இறந்த பின்னாடி அவங்க பிரேதத்தை புதைக்கிறதோ அல்லது எரிக்கிறதையோத்தான் எகிப்தியர்கள் செய்துட்டு வந்தாங்க, இப்போ திரும்பித் தன் உடலோட சேர வர்ற Ka-வால தன் (அழிக்கப் பட்ட) உடலோட சேர முடியாததால தெய்வலோகத்துக்கு போற தகுதியை அது இழந்திடுது.. இதனாலதான் மக்கள், மன்னர்களோட பிரேதங்களை பதப் படுத்தி, பாடம் செஞ்சு பாதுகாத்து, திரும்பி வர்ற Ka-வுக்கு உதவி புரியறதா நம்பினாங்க.
இறந்த உடல் பாக்டீரியாவால அழிக்கப் பட்டு விடும்-ங்கிறது நமக்கெல்லாமே தெரிஞ்ச விஷயம், அப்படி மட்கப் படும் உடலோட Ka-வால சேர முடியாது. இதனால இப்போ ஒஸைரிஸ்-ஆ மாறி இருக்க முன்னாள் Pharaoh, ஒரு மரணக் கடவுளா தன் கடமைகளை செய்ய முடியாது-ன்னும், இதனால எகிப்திற்கு பேராபத்து வரும்-னும் எகிப்தியர்கள் நம்பினாங்க. இந்த பேரழிவு வர்றதை தடுக்கத்தான்(Prevention is Better Than Cure-னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு பார்ங்களேன்) எகிப்திய மக்கள், தங்கள் மன்னர் இறந்த பிறகு அவங்க உடலை பதப் படுத்தி பாடம் செஞ்சு பாதுகாத்து வைக்க ஆரம்பிச்சாங்க. இப்படி செய்றது ரொம்ப Costly-ஆன வேலை, அதனாலதான் மன்னர்கள் மட்டுமைல்லாம பெரும் பணக் காரர்களும், மன்னர் கிட்ட ஆணி பிடுங்கின பெரிய ஆப்பிஸருங்களும் தங்களோட பிரேதத்தையும் பத்திரப் படுத்தி வைக்க ஆசை பட்டு அப்படியே செஞ்சாங்க.
பிரேதம் மட்குறதை எப்படி தடுத்து பாதுகாத்தாங்கன்னா, பாக்டீரியா தான் வளர்றதுக்கு தண்ணீர் தேவை, அதை பிரேதங்கள்ல இருந்து எடுத்துக்கறது மூலமா பிரேதங்கள் மட்க ஆரம்பிக்கின்றன. அப்போ இறந்த உடலை Dry Out பண்றது மூலமா பாக்டீரியாக்கள் அந்த உடலை அழிக்கறதுல இருந்து தடுத்தாங்க. நாம இப்பொ பிரேதங்களை பாதுகாக்க Ice Box உபயோக படுத்தற மாதிரி, அவங்க Natron-ஐ (Sodium Carbonate and Sodium Bicarbonate), உபயோகிச்சு Mummification முறையால பிரேதங்களை பாதுகாத்து வந்தாங்க. பிரேதம் பத்திரப் படுத்தினதுக்கப்புறம், மன்னருக்கு அவரோட அடுத்த உலகத்துக்கு தேவையான பொருட்கள், உணவு, தங்க ஆபரணங்கள், Furniture, மேலும் அவரோட வேலைக்காரங்களை குறிக்கும் சிலைகளைக் கூட அவரோட கல்லறைல பத்திரப் படுத்தி வந்தாங்க. மன்னரின் ஆத்மா (Ka) அவரொட உடலுடனே பத்திரமாக இருக்கணும்-றதுக்காக, பிரம்மாண்டமான (ஷங்கர் படத்துல போடுற செட் மாதிரி) கல்லறைகளை கட்டி வச்சாங்க. ஆரம்ப காலத்துல் அவை கல்லறைகளாத்தான் இருந்ததே தவிர பிரமிடுகள் அல்ல.
ஆரம்ப காலத்தில் கட்டப் பட்ட கல்லறைகளை படத்தில் பார்க்கலாம். இந்த கல்லறைகளுக்கு "Mastabas"னு பெயர். முதல்ல அடித்தளம் தளம் வச்சிட்டு அது மேல மண் மாதிரியான் Soft பொருட்களை குவிச்சாங்க. இந்த Mound Shape-தான் பிற்காலத்தில் பிரமிட் Shape-கு மாடலா இருந்திருக்கும்னு நம்பறதால, இந்த Mastabas-ஐ அகழ்வாராய்ச்சியாளர்கள், "Source-Pyramid"னு சொல்றாங்க.
பிரமிடுகளை ஏன் கட்டுனாங்கன்ற கேள்விக்கு கிட்டத் தட்ட பதில் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். பதிவு ரொம்ப நீஈஈஈளமா போயிரும்ன்றதால, பொது நலன் கருதி முதல் பாகத்தை இப்படியே முடிச்சுக்கரேன். அடுத்த பாகத்தில நாம பார்க்கப் போறது "பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு?, மனிதனா, ஏலியனா? மனிதனா இருந்தா எப்படி கட்டி இருப்பாங்க? ஏலியனா இருந்தா எப்படி? இன்னும் பல பதில் கண்டுபிடிக்கப் படாத கேள்விகளுடன் பார்க்கலாம்... இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றி...
களவாணி
போடுவதெல்லாம் மொக்கை... மொக்கையைத் தவிர வேறெதுவும் இல்லை...
Friday, 2 May 2008
அதிசயங்களின் ரகசியங்கள் - 1
Saturday, 23 February 2008
கவுண்டர் பெல் கலக்கும் மாடர்ன் பெட்டர்மாக்ஸ் லைட் காமெடி...
"ஆல் இன் ஆல் அக்கொளண்ட் மேனேஜர் கவுண்டர் பெல்", அப்படினு ஒரு போர்டு. அப்படியே கேமராவை கீழ இறக்கி, ரூமுக்குள்ள ஜூம் பண்ணா, நம்ம கவுண்டர் மவுஸை தேய்ச்சிக்க்கிட்டே மானிட்டருக்குள்ள மண்டைய உட்டு உன்னிப்பா கால் பந்து மேட்ச் பார்க்கிற மாதிரி கவனிக்கிறாரு.
Thursday, 14 February 2008
காதல் கவுஜ... (காதலர் தினமாம்ல அதான்...)
ஏறினாள் என்னவள்,
கோவிலாகியது...
எடை பார்க்கும் எந்திரம்.
"பிரசாதத்தின் மதிப்பு நூறு பைசா"
நானும் பல நாளா யோசிச்சு பார்த்தேன், என்னத்தடா பதியறதுன்னு.
நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போக ரெயில் வே ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு வெயிட் பார்க்கிறதப் பார்த்த உடனே (பெரிய கவிப் புலவர் மாதிரி) மனசுக்குள்ள சில பல கவுஜ ஊத்தோ ஊத்துனு ஊத்துச்சு... :)
அதுல ஒரு சுமாரான கவுஜதான் இது. என்னோட முதல் கவுஜயும் கூட...
சி வி ஆர் அண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், இனி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, நல்ல பதிவுகளை முடிந்த வரை போட முயற்சிப்போம்.
பின் குறிப்பு:- இந்த காதல் கவுஜ "இன்னிக்கு காதல் கவுஜர்கள் தொல்லை தாங்கல சாமிகளா...... :(" என்று குரல் கொடுத்த "ராம்" அண்ணனுக்கு சமர்ப்பணம்... :)
அதே பழைய அன்புடன்...
களவாணி.
Tuesday, 31 July 2007
மனிதனை ஆளும் இயந்திரங்கள்...
நான் இரண்டாம் வருடம் தொழிற்கல்வி படிச்சிட்டிருந்த சமயம், காலேஜை கட் அடிச்சிட்டு வீட்டுல தூங்கிட்டு இருந்தேன்.
அன்னிக்கு என்ன கிழமைன்னெல்லாம் ஞாபகம் வரல.
11 மணி இருக்கும்.
காலாங் காத்தால எங்க வீட்டு ஃபோன் என்னியவே எழுப்புற அளவுக்கு காட்டு கத்து கத்துச்சு. எங்க அம்மா எட்டி உதைச்சாக் கூட எந்திரிக்க மாட்டேன். அந்த ஃபோன் சத்தம் இந்த தூங்கிட்டு இருந்த சிங்கத்த எழுப்பிருச்சின்றத வச்சே, அத ரொம்ப நேரமா யாரும் சீண்டலன்றது தெரிஞ்சுடுச்சு. அப்பதான் வீட்டுல யாரும் இல்லன்றதும் தெரிஞ்சது. என்னை விட்டா அந்த ஃபோனுக்கு யாரும் ஆதரவு தர மாட்டாங்கன்றதால, நானே எழுந்து போய், டெலிபோனுக்கு கை கொடுக்க வேண்டியதாகிடுச்சு.
கிரஹாம்பெல்ல திட்டிக்கிட்டே ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
"ஹலோ"
"செந்தில் நாந்தாண்டா"
"சொல்லுங்க மாமா (இவருக்கு வேற வேலையே இல்லடா. ஏந்தான் லீவ் போட்டதை இவர்ட்ட சொன்னேனோ)"
"டேய் உடனே வீட்டுக்கு கெளம்பி வாடா"
"ஏன் மாம காலான்காத்தால தொல்லை பண்றீங்க?"
"டேய் நான் நோட் புக் வாஙியிருக்கேன்டா"
"தோடா நான் ஸ்கூல்ல படிக்கும் போதெல்லாம் மாமா நோட்டு வாங்கித்தா தாம்பேன். அப்பெல்லாம் சும்மா இருந்தீங்க. இப்போ நான் காலேஜ் போரேன் மாமா, நோட்டு புக் எல்லாம் எடுத்துட்டு போனா அஜிங்கம் தெரியுமா?"
"டேய் கொய்யாத் தலையா உங்கம்மா இங்கேதான் இருக்காங்க. மொபைல அவங்க கிட்ட தரவா?"
"ஐய்ய இந்தம்மாக்கு வேற வேலையே இல்ல. மார்க்கெட்டுக்கு போனோமா
வீடு வந்தோம்மான்னு இல்லாம உங்க வீட்டுல வந்து நை நைன்னு."
"நான் சொன்னது லினோவா நோடுபுக்டா"
"இதையெல்லாம் தெளிவா சொல்றதில்லையா. ஆமா அதுல என்ன தெரியும்னு நீங்க வாஙியிருக்கீங்க?."
"டேய் DVD ரைட்டரோட வாங்கியிருக்கேன்டா."
"அதானே திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு வாங்கி 30 ப்ரிண்ட் போட்டு தெரு பூரா வாடகைக்கு விடப் போரீங்களா?"
"நீ இப்போ வர்றியா இல்லையா?"
"ம்ஹூம் 10 நிமிஷம்".
கம்ப்யூட்டர்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லைன்னாலும், அவருக்கு எதுவும் தெரியாதுன்றதால என்னிய கூப்பிட்டாரு. 10-வது நிமிஷம் அங்க அட்டன்டன்ஸ் போட்டேன். பார்த்தா மனுஷன் நிறைய தமிழுக்கு டப் பண்ண இங்க்லிஷ் படம்லாம் வச்சிருந்தாரு. அதுலேர்ந்து, ஐ, ரோபோட் படம் (என் செலெக்ஷந்தான்) பார்த்தோம். மார்க்கெட்டுக்கு போற எங்கம்மாவும் கட் அடிச்சிட்டு பார்த்தாங்க...
பாதி படத்துலயே எங்கம்மா, "இது என்ன நல்ல கதியா இருக்குதே, மெஷின் எங்கனா யோசிக்குமா?"ன்னாங்க.
"அப்படி இருந்தா என்ன ஆகும்ன்ற கற்பனைதான் இதும்மா"
மணி 12 தொடுற நேரத்துல இருந்தது.
"உன்னிய மாதிரி வேலை வெட்டி இல்லாதவந்தான் இதையெல்லாம் பார்த்து நம்புவான்."
(ஆமா, மோகினி பிசாசு பழி வாங்க வந்ததுன்னா நம்புவீங்க. ப்ளேடு வாங்க காசில்லாம தாடி வச்சவன் வாந்தி எடுக்குற வாயில லிங்கத்த ஒளிச்சு வச்சி எடுத்தா நம்புவீங்க. இதை கற்பனைன்னு சொல்லியே ஒருத்தன் உழைச்சு காசு போட்டு படம் எடுத்தா நம்ப மாட்டீங்க. அவங்க சொல்றதும் சரிதான் மெஷினாவது யோசிக்கிறதாவது. மனுஷனை ஆளுறதாவது, ஓவராத்தான் இருக்குது. ன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே)
இதையெல்லாம் நீயே பாரு நான் மார்கெட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டெ கடிகாரத்தை பார்த்தவங்க, "ஐயையோ மணி 12 ஆகிடுச்சு, _________ போட்டிருவானே. இந்த நாயால 11.30 மணி நாடகத்த விட்டுட்டேனே."ன்னு அன்னிக்கு பிரபலமா இருந்த ஒரு சீரியல் பேரை சொல்லிக்கிட்டே எங்க மாமா வீட்டு டி.வியை போட ஓடினாங்க. கூடவே எங்க மாமாவோட அம்மாவும் சமையல் கட்டுலேர்ந்து கடாயை தீய போட்டுட்டு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாங்க. காய்கறி வாங்க எடுத்துட்டு வரப்பட்ட கூடை காலியாத்தான் இருந்தது அன்னிக்கு 1.30 மணி வரைக்கும்.
யோசிக்கத் தெரியாத டி.வி எங்க வீட்டு பெண்களையே ஆள்றதை வெரிச்சு பார்த்துட்டு இருந்தேன் நான்.
Thursday, 26 July 2007
எட்டு
போடுறதுக்கு முன்னாடி அது என்ன 8ன்னு அவங்கப் பதிவ ஒரு எட்டு போய் பார்த்தா, நம்ம கிட்ட இருக்குற பெருமைப் படக் கூடிய "8" விஷயங்களை எழுதுமாம். இது ஆவுரதில்லன்னு அங்கனயே ஒரு லேட் என்ட்ரி பின்னூட்டத்தப் போட்டுட்டு இந்த 20 நாளா யோசிக்க ஆரம்பிச்சேன்.
நானும் தலகீழ நின்னும் யோசிச்சேன். ரூம் போட்டு யொசிச்சேன், குப்புற படுத்து யோசிச்சேன். ம்ஹூம். என்ன ஒரு அநியாயம் ஒன்னு கூட கிடைக்கல. அதனால என்கிட்ட இருக்க எனக்கு தெரிஞ்ச '8'ஐ போடுறேன் தப்பா எடுத்துக்காதீங்க...
1. இப்ப வர்ற தமிழ் படங்கள்ல, கொலை நகரமா காட்டப் படுகிற தமிழ் நாட்டின் தலை நகரத்துல தான் எங்க அம்மா எனக்கு பிறப்பை கொடுத்தாங்க. ஹேய். ஹேய். ஹேய். ஹேய். இப்படி காட்டு கத்துக்கு நடுவுல அமைதியாப் பிறந்தவன் இந்த அபூர்வ சிகாமணி.
2. ஒருத்தன் உதவியே கேட்கலைன்னாலும், ரஜினி சார் மாதிரி ச்சும்மா பாய்ஞ்சி பாய்ஞ்சி உதவி செய்வேன். இதனால எப்பவுமே சிக்கல்ல மாட்டிக்கிட்டாலும், இது நான் ரொம்ப பெருமைப் பட்டுக்கிற விஷயம்.
3. எனக்கு பைக் ஓட்டத் தெரியாது. இதுல என்னடா பெருமைங்கறீங்களா?, என்னால ஓசோன்ல விழ வேண்டிய ஓட்டை கொஞ்சம் லேட்டா விழுதே... (பெருமைப் பட எதுவும் கெடைக்கலைன்னா இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)
4. என் பாஸுக்கு கீழ வேலை பார்க்கிறது. ரொம்ப நல்லவரு, வேலைக்கு எந்த ட்ரெஸ்ல வேணா வா. உன் வேலைய "மட்டும்" கரெக்டா பண்ணிட்டா போதும்பாரு. "ஓவர் டைம்" பாக்கிறவங்களை பிடிக்காது. "வேலையை மிச்சம் வக்கிறவந்தான் அத ஓவர் டைம் பார்த்து சரி செய்வான்"ன்னு சொல்வாரு. வேலைக்கு லேட்டா வரலாம். சீக்கிரமா வீட்டுக்கு "S" ஆகிடலாம். இப்ப சொல்லுங்க அவரு நல்லவருதானே? இந்த மாதிரி பாஸ் கிடைச்சதுக்கு நான் ரொம்ப பெருமை படறேன்.
5. எல்லாரும் தன்கிட்ட பெருமைப் பட இருக்குறதை எழுதிருந்தாங்க... நான் இதெல்லாம் இல்லாததால பெருமை படறேன்.எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. தண்ணி, பம்பு செட்டுல கூட அடிக்க மாட்டேன். வாயில விரல் வச்சாக் கூட கடிக்கத் தெரியாது. (விரலை உங்க வாயில வச்சா ). இது நான் ரொம்ப பெருமை பட்டுக்கிற விஷயம்.
ஆனா, எப்பமாச்சும், ஃப்ரெண்ட்ஸ் கூட அவங்களுக்கு கம்பெனி கொடுக்க பாருக்கு போறதுண்டு. அங்க அவிங்களுக்கு வைக்கிற ஸைட் டிஷ்-அ மட்டும் வீடு கட்டி சாப்பிடுவேன். சர்வரை அடிக்கடி கூப்பிட்டு தம்ஸ்-அப் கொண்டு வா, சிப்ஸ் கொண்டு வான்னு அவன் மேல ஏறுவேன். பார்க்குறவன்கள்லா என்னமோ எங்க பத்து பேர் குரூப்ல பாதி சரக்க நானே ஆட்டையப் போட்டா மாதிரி பார்ப்பாங்க. கொலை வெறியோட தம்ஸ்-அப் குடிக்கிறவன் நான். நான் போன வாரம் ஃப்ரெண்டு ஒருத்தன் கொடுத்த ட்ரீட்-ல கொடுத்த சவுண்ட். "ஸைட் டிஷ் ஜரா ஜல்தி லேக்கர் ஆவ். ஸைட் டிஷ்க்கே பினா மே தம்ஸ்-அப் நஹி பித்தா."
6. சிம்பிளா இருக்குறது. நம்ம சிம்ப்ளி சி.வி.ஆர் மாதிரி, நம்மள சிம்ப்ளி செந்தில்ன்னு சொல்லலாம். எனக்கு எந்த ஒரு வேலை செய்தாலும், சிம்பிளா செய்துக்குவேன். இதுவே மத்தவங்களுக்குன்னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும். நான் ஏன் அப்படி செய்யிரேன்னு எனக்கே தெரியாது, அது அப்படியே பழக்கம் ஆகிடுச்சு.
7. கடவுள் எனக்கு பக்க பலமா இருக்குற மாதிரியான ஒரு நினைப்பு. ஏன்னா எனக்கு "ஒரு பெரிய பாதிப்பைத் தரும்"னு என் கூட இருக்குறவங்க சொன்ன பிரச்சினை எல்லாமே புஸ் ஆன ராக்கெட் மாதிரி ஆகியிருக்கு. என்னை "வேண்டாம் நம்ம பழக்கத்தை இன்னியோட விட்டுரலாம்"னு சொன்னவங்க எல்லாம், மறு நாள் காலையில சந்திக்குறப்பவே பழைய மாதிரி சந்திச்சிருக்காங்க. இதுல சொல்லப் போற முக்கியமான விஷயம், எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. இதனால எனக்குள்ளயே ஒரு கர்வம் இருக்கு. "ஒனக்கு ஒண்ணும் ஆகாதுடா துணிஞ்சு போடா"ன்னு ஒரு உந்து சக்தி. அதனால, எந்த வேலையா இருந்தாலும் துணிஞ்சு செய்யிறது, யார் கூட பேசும்போதும் சரி, மனசுல இருக்குறத அப்படியே சொல்லிடுவேன். எனக்குள் இருக்குற என்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயம் இது. கடந்த 2 வருஷமாத்தான் அதை நான் புரிஞ்சுக்கிட்டு வர்றேன். பாட்டிம்மா அதுக்கு ஒரு விளக்கம் சொன்னா நல்லாருக்கும்...
8. ரெளத்ரம் பேசுறது. இதைப் பத்தி இங்கே எழுதுறதை விட ஒரு பதிவாப் போட்டுடலாம்னு இருக்கேன். அதனால போட்ட பிறகு படிச்சுக்குங்க....
1. தம்பி
2. அரைபிளேடு
3. ஜொள்ஸ்
6. ஸ்யாம்
இதுக்கு மேல என்னால தேடி கண்டு பிடிக்க முடியலடா சாமி. நானே கடைசியா வந்ததால எல்லாருமே போட்டிருப்பாங்க...
இதோட முடிச்சுக்குவோம். யாராவது போடிலின்னா என் பேரைச் சொல்லி போட்டிருங்க. நாந்தான் ரெகமன்ட் பண்ணதா சொல்லிக்குரேன்.
காபி & பேஸ்ட் (இல்ல நான் பேஸ்ட் வச்சி ப்ரஷ் பண்ணிட்டு அப்புறம்தான் காபி குடிப்பேன்)..
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்...
Wednesday, 30 May 2007
உனக்கெல்லாம் சங்கம் வேண்டிக் கெடக்கு?
"பச்சை நிறமே, பச்சை நிறமே" மொபைல் ரிங்டோன் அடிக்குது.
மகேஷ்: (எப்பவாச்சும் புடுஙுற ஆணியக் கூட புடுங்க விட மாட்டெங்கிறானுவ): ஹலோ.
களவானி: மச்சான். சும்மாத்தானே இருக்க.
ம: இல்லடா. ஆணி இன்னிக்கு கொஞ்சம் அதிகம்.
க: அதையே என்னிக்கோ ஒரு நாள்தான் தர்றாங்க. அதுக்கே இப்படி சலிச்சுக்கிற.
ம: வாழ்வுடா ஒனக்கு.ஒரு வேலையும் இல்லாம சும்மா ஒக்கார்ந்துக்கிட்டு இருக்க மாதிரி சைட் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியா. என்ன மேட்டரு?
க: ஆணி புடுங்குறல்ல. எவ்வளவு நேரம் ஆகும், அந்த ப்ராப்ளம் சால்வ் பண்ண?
ம: 5 நிமிஷம்.
க: சரி முடிஞ்சவுடனே கூகுள் சாட்டுக்கு வா, சொல்றேன்.
15 நிமிஷம் கழிச்சு சாட்டுக்கு வர்றான்(ர்) மகேஷ். கூகுள் டாக் சாட் ஸ்க்ரீனில்,
mageshmag: sollu machaan.
me: ஒன்னிமில்லடா, என்னோட ப்லாக்கைப் பார்த்தியா? (சாட்டிலும் தமிழ் பயன்படுத்துவது என் வழக்கம்)
mageshmag: hav your lunch? (இது இங்லிஸாமா)
me: டேய் எத்தன தடவ சொல்றது, No more formalities with friends.
mageshmag: ok. what is the matter?
me: அதுல புதுசா பதிவு ஒன்னு போட்டிருக்கேன். படிச்சிப் பாரு.(பதிவப் போடுறதும் நானே. மார்க்கெட்டிங்கும் நானே.)
mageshmag: what is your block name.
me: dai, athu block illadaa blog.(ஒன்னியெல்லாம் என் ப்லாக்கைப் படிக்கக் கூப்பிடுறேன் பார், என்னைச் சொல்லணும்)
mageshmag: bored of chat, i'll call U.
"தம் ஹரே தம்" இது என் மொபைல் ரிங் டோன்.
மகேஷ்: சாட் பண்ணி போர் அடிக்குது. மேட்டரை ஃபோன்லயே சொல்லு
களவானி: நானும் சங்கம் ஆரம்பிக்கப் போரேன். நீயும் வாரியா?
ம: சரி. ஆமா ப்லாக்ன்னா என்ன?
க: வாடா வா, ஒன்னியத் தான்டா பதிவுலக மக்கள்லாம் தேடிக்கிட்டிருக்காங்க. (எனக்கே ஒன்னும் தெரியாதுங்கிறத நான் இங்கே சொல்லப் போறதில்ல)
ம: நாம ரெண்டு பேரு மட்டுந்தானா?
க: நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னும் பண்ண முடியாது. அதனால நமக்கு தோதா இன்னொரு ஆளையும் கூப்பிட்டிருக்கேன்.
ம: அவரை எப்படிடா ஒனக்குத் தெரியும்.
க: அவரு சூப்பர் பதிவர்றா, ஒனக்கு பதிவர்க்கே அர்த்தம் தெரியாது, நீ பேசற. நேரம்டா. சரி பேர் என்ன வைக்கலாம்?
ம: அதான் செல்வேந்திரன்னு சொன்னியே.
க: டேய் அது அவர் பேர்றா. ப்லாக் பேரைச் சொல்லு.
ம: இப்படி தெளிவாக் கேட்கனும்ல. நீயே சொல்லு.
க: "பெயர் வைக்கப் படாத சங்கம்?"
ம: போடாங்க. ஹூம். நாடோடி மன்னர்கள். இதெப்படி இருக்கு?
க: எப்படிடா இதெல்லாம்?
எனக்கும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுற பதிவுலக நண்பர்களே. நாங்களும் சங்கம் ஆரம்பிச்சிட்டோம். நீங்க என்ன சொல்றீங்க? "அதுதான் தலைப்புலயே இருக்கேடா"ன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.
அது சரி. சங்கத்து அட்ரஸ் வேண்டாமா? ("ரொம்ப நல்லவன்டா செந்தில், தப்பித் தவறி கூட அந்தப் பக்கம் வரக் கூடாதுன்னு அட்ரஸ்ல்லாம் தர்றான்யா அப்படின்னு நெனச்சிராம அங்கனயும் வாங்க, ஆதரவு தாங்க.".)
இதோ "நாடோடி மன்னர்கள் சங்கம்"
மன்னர்கள்: செல்வேந்திரன், "உயிர்" மகேஷ், களவானி.
தெரியாத் தனமா எங்க சங்கத்துல சேர்ந்த செல்வேந்திரன் அண்ணனுக்கு நன்றிகள் பல.
http://nmsangam.blogspot.com
சங்கம் உருவான மாபெரும் வரலாறை நான் பதிச்சிட்டேன். முதல் பதிவப் போட செல்வேந்திரன் அண்ணனை அழைக்கிறேன்.
Wednesday, 23 May 2007
அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?
உதாரணத்துக்கு,
UPS tracking numbers
example search: "1Z9999W99999999999"
FedEx tracking numbers
example search: "999999999999"
USPS tracking numbers
example search: "9999 9999 9999 9999 9999 99"
Vehicle ID (VIN) numbers
example search: "AAAAA999A9AA99999"
UPC codes
example search: "073333531084"
Telephone area codes
example search: "650"
Patent numbers
example search: "patent 5123123"Remember to put the word "patent" before your patent number.
FAA airplane registration numbers
example search: "n199ua"An airplane's FAA registration number is typically printed on its tail.
FCC equipment IDs
example search: "fcc B4Z-34009-PIR"Remember to put the word "fcc" before the equipment ID.
அடுத்த பதிவு கம்ப்யூட்டர் வைரஸ் உருவாக்கியவருடன் ஒரு நேரடி சந்திப்பு.