Friday, 2 May, 2008

அதிசயங்களின் ரகசியங்கள் - 1

இந்த பதிவில இருந்து புதுசா ஒரு தொடர் (எது மாதிரியும் அல்லாத புது மாதிரியா-ல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான்...) தொடங்கலாம்னு தோணுச்சி. தொடக்க உரை எல்லாம் கொடுத்து போர் அடிக்காம, Let's go to the Subject....

கொஞ்ச நாளாவே நிறைய கேள்விகள், என் தம்மாத்தூண்டு மூளையப் போட்டு குடைஞ்சிட்டு இருந்துச்சு... அதெல்லாம் என்னன்னா,

பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு, மனுஷங்களா வெளி உலக வாசிகளா, இல்ல இங்கே கட்டி வச்சிட்டு வெளி "உலகத்துக்கு" அதாவது கோள்களுக்கு ஷிப்ட் ஆனவங்களா? ஏன் கட்டுனாங்க? எப்படி கட்டுனாங்க? (வேலை இல்லாம சும்மா உட்கார்ந்துட்டு இருந்தா இப்படித்தான் கோகு மாக்கா யோசிக்கத் தோணுமாம்) இப்படி ஒரு கேள்விக்கு பதிலை தேடி போய் பல கேள்விகள் தொடங்கிருச்சு.

இந்த கேள்விகளுக்கு பதில் தேடி சைட் விட்டு சைட் (Sight இல்ல... Site) தாவுனதுல பல முரண்பாடான பதில்கள். அவற்றில் பல உங்கள் பார்வைக்கு...

Subject-குள்ள போறதுக்கு முன்னாடி எகிப்தியர்கள் பத்தியும் அவங்க கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா, மேற்படி வர்ற விஷயங்களை நாம ஈஸியா புரிஞ்சுக்க முடியும்.

எகிப்திய ராஜாங்கம் மற்றும் நம்பிக்கை.

2575 கி.மு. -2150 கி.மு. இந்த காலப் பகுதி "Old Kingdom"னு அழைக்கப் படுது. இந்த Old Kingdom-ல தான் Pharaoh-க்கள் (அதாவது எகிப்திய மன்னர்கள், Pronounce: "Fair-row"), நைல் நதியால வளமா இருக்க நைல் பள்ளத் தாக்குல ஒரு நிலையான மத்திய அரசை நியமிச்சாங்க. (நம்மால ஒரு நிலையான மத்திய அரசை என்ன மாநில அரசைக் கூட நியமிக்க முடியாதுங்கறீங்களா??? நாம எகிப்தியர்கள் இல்லீங்க...) இந்த மன்னர்களோட கடைசி ஆசைக்காக, அவங்க உடலை இறப்புக்கப்புறம் பாதுகாக்க இந்த பிரமிடுகளும், பிற கல்லறைகளும் கட்டப் பட்டிருக்கலாம்.

"உடல் (Body), பா (Ba), கா (ka) எனும் மூன்று மூலகங்களால் (elements) பிணைக்கப் பட்டவன் மனிதன்"-னு எகிப்தியர்கள் நம்பினாங்க.

மனிதனா பிறந்த எல்லாருக்குமே உடல்-னு ஒன்னு இருக்கும் (யாருங்க அது அப்படியானு வாயைப் பிளக்குறது???!!!). இது ஒருத்தர்லேருந்து இன்னொருத்தர்க்கு வேறுபடும். உடல் வளர்ச்சி அடைறதை அவங்க "Making Changes"-னு சொன்னங்க. மரணம்தான் உடலின் கடைசி மாற்றமாக அமைவது.

இதே போல ஒவ்வொரு மனிதருக்கும், Ba னு ஒன்னு இருக்கு. நம்ம உடல் மாதிரியே இந்த Ba-வும் ஒருத்தருகொருத்தர் வேறுபட்டாலும், இது உடலோடு சம்பந்தப் பட்டது கிடையாது (அதாவது கண்ணுக்கு தெரியாத ஒன்னு). இதை ஆங்கிலத்துல "manifestation"னு சொல்லலாம், அதாவது "வார்த்தைகளை பிரயோகிக்காம வெளிப்படுத்துதல்". இன்னும் விளக்கமா  சொல்லனும்னா "ஒவ்வொருவருக்கும் வேறுபடும் உடல் அல்லாதவையே இந்த Ba". உதாரணத்துக்கு கிட்டத்தட்ட "Personality, Character" மாதிரி. baஇந்த மனித உடலோட இருக்க பறவை தோற்றம் Ba-வை குறிப்பதுதான்.

ka, இதை ஆங்கிலம் பன்மை-ல "sustenance" சொல்லலாம். அதாவது சக்தி கொடுக்குற ஒரு Source மாதிரி. இதுவும் Ba மாதிரி கண்ணுக்கு தெரியறது இல்ல, ஆனா உடலுக்கும் இதுக்கும் ஒரு Connection இருக்கு. இறந்தவரோட ka-வுக்கு எகிப்தியர்கள் உணவு கொண்டு படைக்கவும் செஞ்சிருக்காங்க, ஆனா ka ஆன்மா மாதிரி கண்ணுக்கு தெரியாத ஒன்னு-ன்றதால, அந்த உணவு இறந்த உடலுக்கு பாதுகாப்பு தரக் கூடியதாகத்தான் அந்த படையல் படைக்கப் பட்டிருக்கு.

இப்போ நம்ம "கதை"ல வரப் போர சில கேரக்டர்கள் பத்தி முன்னமே பார்த்திடுவோம்...

முதல்ல, "ஒஸைரிஸ்" (Osiris, The God of Death). Osirisஇவர் பூமி கடவுளின் தலைமகன். இறப்பு மட்டுமில்லாம பிறப்பு மற்றும் ஆண்மைக்கும் இவர்தான் கடவுள்.

Ra அடுத்த கடவுள், ரா (Ra).  இவர் சூரிய கடவுள்.

Horusஅடுத்த கடவுள், ஹோரஸ் (Horus).  இவர் கடவுள் ஒஸைரிஸின் மகன். இவர் சொர்க்கத்தின் கடவுள், மற்றும் சூரியக் கடவுளின் காவலர்.

Introduction முடிச்சாச்சு, இப்போ மேட்டருக்கு வருவோம்... ஆட்சியில் இருக்கும் pharaoh இறந்த பிறகு கடவுள் ஒஸைரிஸ்-ஆக மாறி விடுகிறார்கள்-னு எகிப்தியர்கள்நம்பினாங்க. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வர்ற Pharaoh கடவுள் ஹோரஸ் ஆகிடுவாரு. இது ஒரு Cycle மாதிரி. இப்படி, ஒருவர் இறந்த பிறகு Ka-உம் Ba-உம் உடலை விட்டு பிரிக்கப்பட்டு விடும். அதனால அந்த இரண்டுக்குமே இறப்பு கிடையாது. Ka-வையும் Ba-வையும், அடுத்த உலகத்துக்கு வழியனுப்ப எகிப்தியர்கள் "Opening of the Mouth"னு சடங்கை செஞ்சுட்டு வந்தாங்க. இதுக்கப்புறம்தான் நாம முன்னமே பார்த்த மாதிரி Ka-க்கு படையல் கூட வைப்பாங்க.

Opening of the Mouthஇப்படி பாதாள உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Ka, திரும்ப வந்து தன் உடலோட சேரணும், அப்படி சேரும் பட்சத்தில் அது அதற்கடுத்த உலகமான, தெய்வலோகத்துக்கு, கடவுள்களோட வாழ்றதுக்காக அனுப்பி வைக்கப் படும். மனிதன் இறந்த பின்னாடி அவங்க பிரேதத்தை புதைக்கிறதோ அல்லது எரிக்கிறதையோத்தான் எகிப்தியர்கள் செய்துட்டு வந்தாங்க, இப்போ திரும்பித் தன் உடலோட சேர வர்ற Ka-வால தன் (அழிக்கப் பட்ட) உடலோட சேர முடியாததால தெய்வலோகத்துக்கு போற தகுதியை அது இழந்திடுது.. இதனாலதான் மக்கள், மன்னர்களோட பிரேதங்களை பதப் படுத்தி, பாடம் செஞ்சு பாதுகாத்து, திரும்பி வர்ற Ka-வுக்கு உதவி புரியறதா நம்பினாங்க.

இறந்த உடல் பாக்டீரியாவால அழிக்கப் பட்டு விடும்-ங்கிறது நமக்கெல்லாமே தெரிஞ்ச விஷயம், அப்படி மட்கப் படும் உடலோட Ka-வால சேர முடியாது. இதனால இப்போ ஒஸைரிஸ்-ஆ  மாறி இருக்க முன்னாள் Pharaoh, ஒரு மரணக் கடவுளா தன் கடமைகளை செய்ய முடியாது-ன்னும், இதனால எகிப்திற்கு பேராபத்து வரும்-னும் எகிப்தியர்கள் நம்பினாங்க. இந்த பேரழிவு வர்றதை தடுக்கத்தான்(Prevention is Better Than Cure-னு அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு பார்ங்களேன்) எகிப்திய மக்கள், தங்கள் மன்னர் இறந்த பிறகு அவங்க உடலை பதப் படுத்தி பாடம் செஞ்சு பாதுகாத்து வைக்க ஆரம்பிச்சாங்க. இப்படி செய்றது ரொம்ப Costly-ஆன வேலை, அதனாலதான் மன்னர்கள் மட்டுமைல்லாம பெரும் பணக் காரர்களும், மன்னர் கிட்ட ஆணி பிடுங்கின பெரிய ஆப்பிஸருங்களும் தங்களோட பிரேதத்தையும் பத்திரப் படுத்தி வைக்க ஆசை பட்டு அப்படியே செஞ்சாங்க.

பிரேதம் மட்குறதை எப்படி தடுத்து பாதுகாத்தாங்கன்னா, பாக்டீரியா தான் வளர்றதுக்கு தண்ணீர் தேவை, அதை பிரேதங்கள்ல இருந்து எடுத்துக்கறது மூலமா பிரேதங்கள் மட்க ஆரம்பிக்கின்றன. அப்போ இறந்த உடலை Dry Out பண்றது மூலமா பாக்டீரியாக்கள் அந்த உடலை அழிக்கறதுல இருந்து தடுத்தாங்க. நாம இப்பொ பிரேதங்களை பாதுகாக்க Ice Box உபயோக படுத்தற மாதிரி, அவங்க Natron-ஐ (Sodium Carbonate and Sodium Bicarbonate), உபயோகிச்சு Mummification முறையால பிரேதங்களை பாதுகாத்து வந்தாங்க. பிரேதம் பத்திரப் படுத்தினதுக்கப்புறம், மன்னருக்கு அவரோட அடுத்த உலகத்துக்கு தேவையான பொருட்கள், உணவு, தங்க ஆபரணங்கள், Furniture, மேலும் அவரோட வேலைக்காரங்களை குறிக்கும் சிலைகளைக் கூட அவரோட கல்லறைல பத்திரப் படுத்தி வந்தாங்க. மன்னரின் ஆத்மா (Ka) அவரொட உடலுடனே பத்திரமாக இருக்கணும்-றதுக்காக, பிரம்மாண்டமான (ஷங்கர் படத்துல போடுற செட் மாதிரி) கல்லறைகளை கட்டி வச்சாங்க. ஆரம்ப காலத்துல் அவை கல்லறைகளாத்தான் இருந்ததே தவிர பிரமிடுகள் அல்ல.

ஆரம்ப காலத்தில் கட்டப் பட்ட கல்லறைகளை படத்தில் பார்க்கலாம். இந்த கல்லறைகளுக்கு "Mastabas"னு பெயர்.Mastabas முதல்ல அடித்தளம் தளம் வச்சிட்டு அது மேல மண் மாதிரியான் Soft பொருட்களை குவிச்சாங்க. இந்த Mound Shape-தான் பிற்காலத்தில் பிரமிட் Shape-கு மாடலா இருந்திருக்கும்னு நம்பறதால, இந்த Mastabas-ஐ அகழ்வாராய்ச்சியாளர்கள், "Source-Pyramid"னு சொல்றாங்க.

பிரமிடுகளை ஏன் கட்டுனாங்கன்ற கேள்விக்கு கிட்டத் தட்ட பதில் கிடைச்சிருச்சின்னு நினைக்கிறேன். பதிவு ரொம்ப நீஈஈஈளமா போயிரும்ன்றதால, பொது நலன் கருதி முதல் பாகத்தை இப்படியே முடிச்சுக்கரேன். அடுத்த பாகத்தில நாம பார்க்கப் போறது "பிரமிடுகள் எல்லாம் கட்டினது யாரு?, மனிதனா, ஏலியனா? மனிதனா இருந்தா எப்படி கட்டி இருப்பாங்க? ஏலியனா இருந்தா எப்படி? இன்னும் பல பதில் கண்டுபிடிக்கப் படாத கேள்விகளுடன் பார்க்கலாம்... இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றி...

6 comments:

CVR said...

சூப்பருபா!!
நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்க!!

அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்!! :-)

Thiyagarajan said...

good post.
waiting for the next post

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல பதிவு. அருமையான தகவல்களை, சுவாரஸ்யமாகப் பகிர்திருக்கீங்க.

'அதிசயங்களின் ரகசியங்கள் - 2'இன் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறோம். :)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

[url=http://wordpress.org/]WP error[/url]