Thursday, 14 February 2008

காதல் கவுஜ... (காதலர் தினமாம்ல அதான்...)

செருப்பைக் கழற்றி விட்டு

ஏறினாள் என்னவள்,

கோவிலாகியது...

எடை பார்க்கும் எந்திரம்.

"பிரசாதத்தின் மதிப்பு நூறு பைசா"







நானும் பல நாளா யோசிச்சு பார்த்தேன், என்னத்தடா பதியறதுன்னு.

நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போக ரெயில் வே ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு வெயிட் பார்க்கிறதப் பார்த்த உடனே (பெரிய கவிப் புலவர் மாதிரி) மனசுக்குள்ள சில பல கவுஜ ஊத்தோ ஊத்துனு ஊத்துச்சு... :)

அதுல ஒரு சுமாரான கவுஜதான் இது. என்னோட முதல் கவுஜயும் கூட...

சி வி ஆர் அண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், இனி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, நல்ல பதிவுகளை முடிந்த வரை போட முயற்சிப்போம்.

பின் குறிப்பு:- இந்த காதல் கவுஜ "இன்னிக்கு காதல் கவுஜர்கள் தொல்லை தாங்கல சாமிகளா...... :(" என்று குரல் கொடுத்த "ராம்" அண்ணனுக்கு சமர்ப்பணம்... :)

அதே பழைய அன்புடன்...

களவாணி.

2 comments:

CVR said...

ஹா ஹா ஹா!!!
Welcome back!!!

நிறைய நல்ல நல்ல பதிவுகள் போட்டு பதிவுலகை கலக்க வாழ்த்துக்கள்!! :-)

களவாணி said...

நன்றிங்க CVR,

உங்க வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும்...

உங்களை மாதிரி சக பதிவர்களாலதான் என்னை மாதிரி புதியவர்கள் ஊக்குவிக்கப் படுறாங்க...