Thursday 10 May, 2007

நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர்...

வணக்கம்...

இதுவரைக்கும் மொக்கை பதிவா போட்டிட்டிருந்த நான், யாரும் எனக்கு பின்னூட்டம் இடாத்தால (தம்பியத் தவிர)... இனிமே நல்ல பதிவாவது போட்டு நண்பர்களுக்கு உதவலாம்னு ஒரு முடிவெடுத்தேன். வெப்ல உலாத்தும்போது கிடைக்கிற சில பல நல்ல மத்தவங்களுக்கு உதவற மாதிரியான விஷயங்கள இங்க கட்டுரையா எழுதலாம்ன்ற நல்ல யோசனைய நண்பர் ஒருத்தர் தந்தாரு.

அதுக்காக இனிவர்ற எல்லா பதிவுகளும் கட்டுரைகளா இருக்காது. நடுவுல மொக்கைகளும் இருக்கும் (திருஷ்டிக்காக). நாமல்லாம் நல்லவனாயிட்டா அப்புறம் நாடு எங்கேருந்து உருப்படுறது.

முதல் கட்டுரை எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் Douglas Chick பத்தினது.


Douglas Chick...


இவர் Orlando FL-ல இருக்க ஒரு பெரிய கம்பெனியோட இன்ஃபர்மேஷன் சிஸ்டடம்ஸ் இயக்குனர். Orlando FL எங்கே இருக்கு செந்தில்?ன்னெல்லாம் என்னிய கேள்வி கேட்கப் படாது. இவர் ஒரு நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டரும் கூட.மற்ற கம்ப்யூட்டர் மக்களை மாதிரி இவரும் கைல MCSE & CCNA சர்ட்டிஃபிகேட் வச்சிருக்காரு.


மே 2000-ல, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் க்கு செஞ்ச சப்போர்ட்ட நிறுத்தினத பத்தி 30-க்கும் மேற்பட்ட இணைய பத்திரிக்கைகள்ல வெளிவந்த இவருடைய தொடர் கட்டுரைகள்ன்னால வெப்-ல ரொம்பவே பிரபலம் ஆகிட்டார். உலகத்துல இருக்க கம்ப்யூட்டர் மக்களப் பத்தின உள்நோக்குப் பார்வையை நகைச்சுவையோட இவர் எழுதுறது மக்கள ரொம்பவும் கவர்ந்திருச்சு.


இது கட்டுரை இல்ல. வெறும் முன்னுரை. இனிமேதான் இவரோட கட்டுரைகளை மொழி பெயர்த்து இங்கே எழுதப்போரேன்...



நன்றி...


Courtesy: thenetworkadministrator.com




10 comments:

ulagam sutrum valibi said...

என்ன ஒருஅனியாயத்த,நீ வலபடாதே ராச நா போடுறேன் இரு முழுசா படிச்சிட்டுவாரேன்..

ulagam sutrum valibi said...

நா வேளையாடுக்கு சொல்லல நீ பாட்டுகு எழுது நா படிக்கிறேன் எமவளுக்கு ஓதவியாயிருக்கும் வரட்டா.பொரவு பாக்கலாம்

இம்சை அரசி said...

நான் கூட கட்டுரை நீங்களே எழுத போறீங்கன்னு நினைச்சேன்... கடைசில மொழிபெயர்க்க போறேன்னு போட்டுட்டீங்க...

ulagam sutrum valibi said...

உங்கபானியில் எழுதலாமுனு எழுதினைன்,தவறாய் இருப்பின் மறந்துவிடவும்.எனக்கு உங்கள் அம்மா ஏன் பாட்டி வயதிருக்கும்.உங்கள் கட்டுரையை அவலுடன்எதிர்பார்கிறேன்.

களவாணி said...

வாங்க உலகம் சுற்றும் வாலிபி,

யக்கா... இத்தப் போயி எம்பாணின்னு சொல்ட்டியேக்கா, நா நாகரிகக் களவாணிக்கா.

இன்னாதான் இருந்தாலும் பர்ஸ்ட் கம்மிங்-க்கும் கமெண்ட்டுக்கும் ரொம்ப டேங்க்ஸ்.

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம், ஏன்டா இந்த உலகம் சும்மா நிக்காம சுத்துதுன்னு. இப்பதான் தெரியுது அத சுத்தி உட்றதே நீங்கதான்னு. :)))

எனக்கு கூட பின்னூட்டம் போட ஆளான்னு ஷாக் ஆயிட்டேன். அதான் பதிலுக்கு லேட் தப்பா நினைச்சுக்காதீங்க.

களவாணி said...

வாங்க அரசி,

கட்டுரைய எழுதப் போறதென்னவோ நாந்தான், சில விஷயங்களை மட்டும் மத்தவங்க கிட்ட இருந்து சுட்டும் எழுதணும். என் மூலமா அவங்களும் பிரபலம் ஆயிட்டு போகட்டுமேங்கிற பெருந்தன்மை :))))

சுட்டு எழுதினாத்தான், இவன் மத்தவனுங்களோடதயும் படிக்கிறான்னு தெரியும். இதெல்லாம் பில்ட் அப்.

நன்றி, முதல் வருகைக்கும் கருத்துக்கும்.....

( நீங்க எத்தினாவது இம்சை அரசிங்க? )

கதிர் said...

ennachu? rompa late akuthe...

கதிர் said...

எழுதப்போறிங்களா இல்லையா?

எவ்வளவு நாள்யா காத்திருக்கறது?

களவாணி said...

மன்னிச்சுக்கோங்க மக்கள்ஸ், (தம்பி ஒருத்தரே "மக்கள்ஸ்" ஆகிட்டாரா?)

"ஆணி புடுங்கல் ஆரம்பம்"னு சைடுல எழுதாதது ஒன்னுதான் குறை. மக்கா என் ஆபிஸ்ல இருக்க மாக்கானுங்க தொல்லை தாங்கல. இன்னும் ரெண்டு ஸைட்ட வேற என் தலையில கட்டிட்டானுவ.

இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா நானு? எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டி, இன்னியோட "ஆணி புடுங்கல் அமுக்கப்பட்டு விடும்". நாளைக்கு முதல் வேளையா ஒரு நல்ல பதிவப் போட்டுட்டு (சொன்ன வாக்கை காப்பாற்ற) அப்புறமா ஒரு மொக்கையுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.

களவாணி said...

என் பதிவின் மேல் உள்ள ஆர்வத்திற்கு நன்றி தம்பி.

தம்பி காத்திருத்தலிலும் ஒரு சுகம் இருக்காத்தான் செய்கிறது. (ம.சா: டேய் அது அவர் கனவுல பாவ்னாக்காக இருக்கலாம், உனக்கு காத்திட்டு இருக்குறதுல என்னடா சுகம்) விரைவில், தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.