Wednesday 18 April, 2007

5 ரூபா தாங்க ஸார்...

நான் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்ல படிச்சிட்டு இருந்தப்ப நடந்தது இது. அன்னிக்கு காலேஜ் அரை நாள்தான்றதால மதியம் 1 மணிக்கு திருவொற்றியூர் ஸ்டேஷனுக்கு எப்பயும் போல ஃப்ரெண்ட்ஸோட வந்தேன். (திருவொற்றியூர்லருந்து கொருக்குப்பேட்டை வரைக்கும் ரயில்ல போறது வழக்கம்.)எங்க கேங்ல நாகராஜ்ன்ற பையனும் நானும் நெறய விஷயங்கள டெக்னிகலா பேசுவோம். ஆனா மத்த பசங்க கலாய்க்கறதுலயே குறியாருப்பானுவன்றதால நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா ஸ்டேஷனோட ஒரு என்ட்லருந்து இன்னோர் என்ட்டுக்கு ஒரு ரவுன்ட் அடிச்சி பேசிட்டு மறுபடி கலாய்க்கிற கும்பலோட ஜோதில நான் ஐக்கியமாயிடுவேன்.

என்னிக்கும் போல அன்னிக்கும் ரவுன்ட் அடிச்சிட்டு, கும்பலோட போற வர்றவனையெல்லாம் வம்பிழுத்திட்டு ஒக்காந்திட்டிருந்த பசங்க கிட்ட நானும் நாகராஜும் வந்தோம். பார்த்தா அன்னிக்கு ஒரு ஆளு நின்னிட்டு இருந்தாரு. பார்க்க 24 வயசிருக்கும். கற படிஞ்ச லுங்கி சட்ட. லுங்கிய நிக்கர் தெரிய தூக்கி கட்டிருந்தாரு. கட்டம் போட்ட சட்ட. (அவங்க தாத்தா போட்டதான்னெல்லாம் கேட்காதீங்க). முடியெல்லாம் கலைஞ்சிருந்தது. ஒடம்பெல்லாம் தூசி. நூல் பட்டரையில வேலை செஞ்சிட்டு முகம் கழுவாம வந்தவர் மாதிரி இருந்தாரு. நாங்க போய் நின்ன நேரம் நம்ம தோழர்கள்ட்ட,"அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க ஸார்"ன்னு கேட்டுட்டிருந்தாரு. நான் என் ஃப்ரெண்ட் பின்னாடி சைடு வாங்கிட்டேன். நானும் நாகராஜும் அந்தாளுக்கு பின்பக்கமா நின்னுட்டிருந்தோம்.

(அந்தாளு எதாவது எடம் பேர சொல்லி ரயில் டிக்கெட் எடுக்க, ஏதாவது காரணம் சொல்லி காசு கேட்டிருக்காருன்னு புரிஞ்சுக்கிட்டேன்.) நம்மளையும் ஒருத்தர் ஸார்ன்னிட்டருன்ற காரணத்துக்காக தோழர்கள்ல ஒருத்தன் காசு கொடுக்க பேண்ட் பாக்கெட்ல கைய விட்டான். நான் பின்னாடியிருந்து "வேண்டான்டா, ஆளப் பார்த்தா நம்பற மாதிரி இல்ல"ன்னு கண்ணால சைகை காட்டினேன். அவன் என்னய கவனிக்குறத பார்த்த அந்தாளு திரும்பி என்னய பார்த்தாரு. நான் அத கண்டுக்கல. சரி கைய விட்டுட்டு காசில்லன்னா நல்லா இருக்காதுன்றதுக்காக 5 ரூபாய அவனும் கொடுத்திட்டான். வங்கிட்டு அந்தாளு போனப்புறம் ஏன்டா கொடுத்தன்னு தோழர்ட்ட கேட்டேன். விடு 5 ரூபதானேன்னு சொன்னான் அவன்.

போன 15 நிமிஷம் கழிச்சு அதே ஆளு திரும்ப எங்க கிட்ட வந்தாரு. வந்தவரு என்கிட்ட டிக்கெட்ட காட்டிட்டு தோழருக்கு ஒரு நன்றிய போட்டுட்டு போனாரு. "இவரப் போயி கெட்டவருன்டியேடா" இது தோழர் என்கிட்ட. நானும் சரி மனுஷன் நல்லவருதான்டான்னு சொல்லிட்டு விட்டுட்டேன். ரயில் வந்தது. ஏறும்போதுதான் நானத பாத்தேன். அதே ஆளு ஒரு பாட்டிகிட்ட எங்க கிட்ட காண்பிச்ச அதே டிக்கெட்ட அந்த பாட்டிகிட்ட காண்பிச்சிட்ருந்தாரு.

அத நான் அந்த தோழர்ட்ட காண்பிக்கல. மனுஷன் மனசு கஷ்டப் படும்ன்னு விட்டுட்டேன். இந்த உலகத்துல மத்தவன எப்படில்லாம் ஏமாத்தலாம்ன்ற வழிய ஏமாத்துறவங்க கண்டுபிடிச்சி வச்சிருக்காங்க. உதவி செய்யிறவங்களும் நாம செய்யிற உதவி சரியானவங்க கிட்ட போய்தான் சேருதான்றத உறுதி படுத்திட்டுதான் உதவணும் போல.

1 comment:

ஜி said...

நம்ம பாலிசி எப்போதுமே உதவி செஞ்சதுக்கப்புறம் அவன் நல்லவனா கெட்டவனான்னு ஆராய்ச்சிப் பண்ணக் கூடாது. அப்படி பண்ணி அது நமக்கு சாதகமா வலரலேன்னா அப்புறம் நம்க்குத்தான் கஷ்டமா போகும் :((