Wednesday, 23 May 2007

அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?

தோ பார்றா, நம்ம கட்டுரைய படிக்கிறதுக்கு கூட ஆளெல்லாம் இருக்காங்க. இதுல பதிவு போடலன்னா அடிக்கிறதுக்கு பிரம்பல்லாம் வேற தேடுறாங்க. டீச்சரா இருந்திருப்பாங்க போலருக்கு. பாட்டி, தயவு செஞ்சு எடுத்த பிரம்ப ஒலுங்கா இருந்த எடத்துலயே வச்சிடுங்க. இதோ என்னோட முதல் உருப்படியான பதிவு. (நான் ஸ்கூல்லயே ஒலுங்க ரெக்கார்ட் எழுத மாட்டேங்க. அப்புறம் ஏன்டா நாயே பதிவ ஆரம்பிச்சேன்லாம் கேட்கப்பிடாது)
அட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி?

சரியான பாரமீட்டர்களை பயன்படுத்தினா நீங்க தேடுறத ஈசியா கூகிள்ல பிடிச்சிரலாம். அதற்கான சில தேடு சொற்களையும் பாரமீட்டர்களையும் உதாரணங்களோட கீழே கொத்திருக்கேன்.

1. filetype:FILE EXTENSION site:SITENAME keyword:KEYWORD

இந்த பாரமீட்டர் மூலமா உங்களுக்கு தேவையான விஷயத்த தேவையான ஃபார்மேட்ல தேட முடியும்.
உதாரணத்துக்கு, உங்களுக்கு microsoft.com டொமைன்ல இருக்குற pdf files தேவைன்னா,

filetype:pdf site:microsoft.com, ன்னு டைப் பண்ணுங்க, microsoft.com-ல இருக்குற ஃபைல்களோட லிஸ்ட் தயார்.

2. intext:KEYWORD
இந்த பாரமீட்டர் மூலமா ஒரு தேடு சொல்ல கொடுத்து, எந்தெந்த வலைகளுக்கெல்லாம் இந்த தேடு சொல் சம்பந்தப் பட்டிருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.

உதாரணத்துக்கு,
intext:confidential-ன்னு டைப் பண்ணீங்கன்னா confidential ன்ற வார்த்தை எந்தெந்த வலைகளுக்கெல்லாம் தேடு சொல்லா செயல்படுதோ அந்த வலைகளோட லிஸ்ட் கிடைக்கும்.
3.inlink:SITENAME

இந்த பாரமீட்டர் கொடுக்கப்பட்ட வலைதள்த்துக்கான லிங்குகளைக் கொண்ட வலைதளங்களோட லிஸ்ட் தயார் பண்ணும்.

உதாரணத்துக்கு,

inlink:www.microsoft.com இந்த தேடு சொல் மைக்ரோசாஃப்ட் வலைதளத்துக்கு செல்லக்கூடிய லிங்குகளைக் கொண்ட மற்ற வலைதளங்களின் லிஸ்டத் தயார் செய்யும்.

4. phonebook: PERSONNAME+LOC INITIAL

இது முக்கியமான ஒன்னு, இதன் மூலமா அமெரிக்கால இருக்கிற நபரோட பெயரையும், இடத்தோட இன்ஷியலையும் கொடுத்து அவங்களோட விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெறமுடியும். (பாட்டி இது ஒங்க ஸ்பெஷல் :)))

உதாரணத்துக்கு,

phonebook:James+FL இப்ப "ஃப்ளோரிடா"ல இருக்க "ஜேம்ஸ்"ன்ற பெயர் கொண்ட எல்லார் வீட்டு அட்ரஸும் தொலைபேசி லிஸ்ட்டும் தயார். உங்க பெயர் மற்றும் விலாசம் இல்லையினா புதுசா இதுல சேர்த்துவிடவும் முடியும்.

5. related:SITENAME

இதன் மூலமா குறிப்பிட்ட தளத்துக்கு சம்பத்தப் பட்ட மற்ற வலைதளங்ககளை கண்டுபிடிக்க முடியும்...

உதாரணத்துக்கு,

related:www.blogger.com, இப்போ நம்ம ப்லாக்கர் தளம் மாதிரியே மற்ற ப்லாக்கர் தளங்களோட லிஸ்ட் தயார்.

6. KEYWORD site: SITENAME

இதன் மூலமா ஒரு குறிப்பிட்ட தளத்துக்குள்ள மட்டும் உங்களுக்கு தேவையானத தேட முடியும்.

உதாரணத்துக்கு,

exchange site:www.microsoft.com விளக்கம் தேவையில்லன்னு நம்பறேன்.

7.weather LOCATION, COUNTRY INITIAL

உதாரணம்,

weather chennai, in


8. PARCEL NAME BILL NUMBER
இதன் மூலமா நீங்க அனுப்பின பார்ஸலோட தற்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சுக்கலாம். (நாந்தான் பர்ஸலே அனுப்பலியேன்னு சொல்லாதீங்க. அனுப்புனவங்களுக்கு. அதே மாதிரி லோக்கல் பார்ஸல்ல அனுப்புறவங்களுக்கு இல்ல)

உதாரணத்துக்கு,

UPS tracking numbers
example search: "1Z9999W99999999999"

FedEx tracking numbers
example search: "999999999999"

USPS tracking numbers
example search: "9999 9999 9999 9999 9999 99"

Vehicle ID (VIN) numbers
example search: "AAAAA999A9AA99999"

UPC codes
example search: "073333531084"

Telephone area codes
example search: "650"

Patent numbers
example search: "patent 5123123"Remember to put the word "patent" before your patent number.

FAA airplane registration numbers
example search: "n199ua"An airplane's FAA registration number is typically printed on its tail.

FCC equipment IDs
example search: "fcc B4Z-34009-PIR"Remember to put the word "fcc" before the equipment ID.


9. கரன்ஸி மாற்றும் முறை (அதாங்க கன்வெர்ஷன்)

உதாரணத்துக்கு 65 அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயோட மதிப்பு தெரியணும்னா,

65 USD in INR

10.NUMBER+NUMBER*NUMBER

அதாங்க கூகுளை கால்குலேட்டராக் கூட பயன்படுத்தலாம்.

"டாய் இதுக்கெல்லாமாடா நாங்க கூகுளை யூஸ் பண்ணுவோம். அதான் எங்க கம்ப்யூட்டர்லயே கால்ஸி இருக்கேடா"ன்றது கேக்குதுண்ணா, அவங்களுக்கு புரியணுமே.

மேலும் விவரங்களுக்கு,



நன்றி: google, Douglas Chick

நான் எதையாவது விட்டுட்டேன்னு, உங்களுக்கு தெரிஞ்சிருந்தா பின்னூட்டம் வழியா பரிமாறிக்குங்க...

அடுத்த பதிவு கம்ப்யூட்டர் வைரஸ் உருவாக்கியவருடன் ஒரு நேரடி சந்திப்பு.

6 comments:

ஜி said...

aaha.. ithu computer vaaramaa???

களவாணி said...

ம்ஹூம். கம்பீட்டர் வருடம்.

Jazeela said...

useful post.

களவாணி said...

// ஜெஸிலா said...
useful post. //

ரொம்ப நன்றி ஜெஸிலா, முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

வெண்ணை(VENNAI) said...

அண்ணெ, நம்ம ஆப்பு வலய்குல்ல அனுமதி வாங்கி தருவிஙலா

களவாணி said...

// வெண்ணை said...

அண்ணெ, நம்ம ஆப்பு வலய்குல்ல அனுமதி வாங்கி தருவிஙலா//

இதுக்கு என்ன அர்த்தம்னே புரியலீங்களே !!!??? கொஞ்சம் விளக்கமா சொல்லுவீங்களா சுதாகர் அண்ணே???