Wednesday, 30 May 2007
உனக்கெல்லாம் சங்கம் வேண்டிக் கெடக்கு?
"பச்சை நிறமே, பச்சை நிறமே" மொபைல் ரிங்டோன் அடிக்குது.
மகேஷ்: (எப்பவாச்சும் புடுஙுற ஆணியக் கூட புடுங்க விட மாட்டெங்கிறானுவ): ஹலோ.
களவானி: மச்சான். சும்மாத்தானே இருக்க.
ம: இல்லடா. ஆணி இன்னிக்கு கொஞ்சம் அதிகம்.
க: அதையே என்னிக்கோ ஒரு நாள்தான் தர்றாங்க. அதுக்கே இப்படி சலிச்சுக்கிற.
ம: வாழ்வுடா ஒனக்கு.ஒரு வேலையும் இல்லாம சும்மா ஒக்கார்ந்துக்கிட்டு இருக்க மாதிரி சைட் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியா. என்ன மேட்டரு?
க: ஆணி புடுங்குறல்ல. எவ்வளவு நேரம் ஆகும், அந்த ப்ராப்ளம் சால்வ் பண்ண?
ம: 5 நிமிஷம்.
க: சரி முடிஞ்சவுடனே கூகுள் சாட்டுக்கு வா, சொல்றேன்.
15 நிமிஷம் கழிச்சு சாட்டுக்கு வர்றான்(ர்) மகேஷ். கூகுள் டாக் சாட் ஸ்க்ரீனில்,
mageshmag: sollu machaan.
me: ஒன்னிமில்லடா, என்னோட ப்லாக்கைப் பார்த்தியா? (சாட்டிலும் தமிழ் பயன்படுத்துவது என் வழக்கம்)
mageshmag: hav your lunch? (இது இங்லிஸாமா)
me: டேய் எத்தன தடவ சொல்றது, No more formalities with friends.
mageshmag: ok. what is the matter?
me: அதுல புதுசா பதிவு ஒன்னு போட்டிருக்கேன். படிச்சிப் பாரு.(பதிவப் போடுறதும் நானே. மார்க்கெட்டிங்கும் நானே.)
mageshmag: what is your block name.
me: dai, athu block illadaa blog.(ஒன்னியெல்லாம் என் ப்லாக்கைப் படிக்கக் கூப்பிடுறேன் பார், என்னைச் சொல்லணும்)
mageshmag: bored of chat, i'll call U.
"தம் ஹரே தம்" இது என் மொபைல் ரிங் டோன்.
மகேஷ்: சாட் பண்ணி போர் அடிக்குது. மேட்டரை ஃபோன்லயே சொல்லு
களவானி: நானும் சங்கம் ஆரம்பிக்கப் போரேன். நீயும் வாரியா?
ம: சரி. ஆமா ப்லாக்ன்னா என்ன?
க: வாடா வா, ஒன்னியத் தான்டா பதிவுலக மக்கள்லாம் தேடிக்கிட்டிருக்காங்க. (எனக்கே ஒன்னும் தெரியாதுங்கிறத நான் இங்கே சொல்லப் போறதில்ல)
ம: நாம ரெண்டு பேரு மட்டுந்தானா?
க: நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னும் பண்ண முடியாது. அதனால நமக்கு தோதா இன்னொரு ஆளையும் கூப்பிட்டிருக்கேன்.
ம: அவரை எப்படிடா ஒனக்குத் தெரியும்.
க: அவரு சூப்பர் பதிவர்றா, ஒனக்கு பதிவர்க்கே அர்த்தம் தெரியாது, நீ பேசற. நேரம்டா. சரி பேர் என்ன வைக்கலாம்?
ம: அதான் செல்வேந்திரன்னு சொன்னியே.
க: டேய் அது அவர் பேர்றா. ப்லாக் பேரைச் சொல்லு.
ம: இப்படி தெளிவாக் கேட்கனும்ல. நீயே சொல்லு.
க: "பெயர் வைக்கப் படாத சங்கம்?"
ம: போடாங்க. ஹூம். நாடோடி மன்னர்கள். இதெப்படி இருக்கு?
க: எப்படிடா இதெல்லாம்?
எனக்கும் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடுற பதிவுலக நண்பர்களே. நாங்களும் சங்கம் ஆரம்பிச்சிட்டோம். நீங்க என்ன சொல்றீங்க? "அதுதான் தலைப்புலயே இருக்கேடா"ன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.
அது சரி. சங்கத்து அட்ரஸ் வேண்டாமா? ("ரொம்ப நல்லவன்டா செந்தில், தப்பித் தவறி கூட அந்தப் பக்கம் வரக் கூடாதுன்னு அட்ரஸ்ல்லாம் தர்றான்யா அப்படின்னு நெனச்சிராம அங்கனயும் வாங்க, ஆதரவு தாங்க.".)
இதோ "நாடோடி மன்னர்கள் சங்கம்"
மன்னர்கள்: செல்வேந்திரன், "உயிர்" மகேஷ், களவானி.
தெரியாத் தனமா எங்க சங்கத்துல சேர்ந்த செல்வேந்திரன் அண்ணனுக்கு நன்றிகள் பல.
http://nmsangam.blogspot.com
சங்கம் உருவான மாபெரும் வரலாறை நான் பதிச்சிட்டேன். முதல் பதிவப் போட செல்வேந்திரன் அண்ணனை அழைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
யோவ் களவாணி, சங்கத்தின் பொதுக்குழுவை உடனே கூட்டுங்கய்யா, நமக்கு உடனே தேவை மகளிரணி (அழகிய) அதைப் பத்தி பேசியாகணும்
அட ஆமா, இத எப்படி நான் மறந்தேன். இதோ இப்பவே சங்கத்தைக் கூட்டிரலாம். செல்வேந்திரன் உங்களால கூகுள் டாக்குக்கு வர முடியுமின்னா, உடனே நான் அனுப்பின இன்விடேஷனை ஒத்துக்கோங்க. குழுவைக் கூட்டிருவோம். ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி செல்வேந்திரன்.
வாழ்த்துக்கள்.. ஆமாம் சங்கம்னா ஒரு குறிக்கோள் இருக்கணுமே.. உங்களோடது என்ன குறிக்கோள்?? :)))
கண்ணு,
நீயும் மகளீர் அணிக்கு என் கழகத்தை கூட்டணியா சேத்துக்குவேன்னு இடிவிடேஷன் எதிர் பாத்தா,பேச்சு மூச்சைக் காணாம்.என்னா செய்தி நல்லா இருக்கியா?
ஆஹா என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஜி-மெயில் ஐ.டி. இல்லாதாலதான் நான் உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பல. உங்க மயில் ச்சீ... மெயில் ஐ.டி.யைக் கொடுங்க, அடுத்த நாளே உங்க இன்பாக்ஸ் வாசல்ல நம்ம இன்விடேஷன். ஆர்வத்திற்கு நன்றி... அப்புறம் இன்னொரு விஷயம் பேராண்டி கிட்ட இப்படி க,கா,கி,கீ ல்லாம் விடப் பிடாது. ஒன்லி டூ, த்ரீ, ஃபோர்தான் விடணும்.:-)
வெயிடிங் ஃபார் யுவர் ரிப்ளை வித் மெயில் ஐ.டி.
யுவர்ஸ் ஒபெடியன்ட்லி,
ஸாரி, ச்சே இந்த லீவ் லெட்டர் எழுதற பழக்கம் எப்பதான் போகுமோ. :(
ஆஹா என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஜி-மெயில் ஐ.டி. இல்லாதாலதான் நான் உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பல. உங்க மயில் ச்சீ... மெயில் ஐ.டி.யைக் கொடுங்க, அடுத்த நாளே உங்க இன்பாக்ஸ் வாசல்ல நம்ம இன்விடேஷன். ஆர்வத்திற்கு நன்றி... அப்புறம் இன்னொரு விஷயம் பேராண்டி கிட்ட இப்படி க,கா,கி,கீ ல்லாம் விடப் பிடாது. ஒன்லி டூ, த்ரீ, ஃபோர்தான் விடணும்.:-)
வெயிடிங் ஃபார் யுவர் ரிப்ளை வித் மெயில் ஐ.டி.
யுவர்ஸ் ஒபெடியன்ட்லி,
ஸாரி, ச்சே இந்த லீவ் லெட்டர் எழுதற பழக்கம் எப்பதான் போகுமோ. :(
12 Jஉன், 2007 11:11:00 ஆM
கண்ணு,
இதோ என் மயில் ச்சச்ச மெயில் ஐ.டி
fabyraj@yahoo.com
தமிழிலே மெயில் அனுப்பு,பொறவு பாக்கலாம்.
kannu,
please send me email in english or in tamil.but not in thaminglish.
செந்தில்
உங்களை சின்ன வேலை, 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.
இந்த வரலாறு பெரிய வரலாறா இருக்கே..எப்பிடிங்க இப்படில்லாம் யோசிக்கிறிங்க//
வந்த வேலையை மறந்திட்டேன்
வாழ்த்துக்கள்:)
செந்தில்,வாழ்த்துக்கள் !
சங்கத்துக்கு என்னிக்கு திறப்பு விழா ?
//செந்தில்,வாழ்த்துக்கள் !
சங்கத்துக்கு என்னிக்கு திறப்பு விழா ? //
வாழ்த்துக்களுக்கு நன்றி கதிரவன். நாம இப்போ இருக்குற நிலமைக்கு, களவாணிய கஷ்டப் பட்டு காப்பாத்திட்டு இருக்கேன்... சங்கத்தை பொறவு பாத்துக்கலாம்னு. அதனால சங்கத்துக்கு கொஞ்ச நாள் லீவு.
//இந்த வரலாறு பெரிய வரலாறா இருக்கே..எப்பிடிங்க இப்படில்லாம் யோசிக்கிறிங்க//
ஹாஹா... ரூம் போட்டெல்லாம் இல்லீங்க...
//வந்த வேலையை மறந்திட்டேன்
வாழ்த்துக்கள்:) //
ரொம்ப நன்றி தூயா, முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். தொடர்ந்து ஆதரவு தாங்க...
Post a Comment