டிஸ்கி: Mail Forward-ல வந்தது... உங்களுக்கும் வந்திருக்கலாம், இருந்தாலும் தமிழ்ல படிச்சாதானே எஃபெக்டே... :)
"ஆல் இன் ஆல் அக்கொளண்ட் மேனேஜர் கவுண்டர் பெல்", அப்படினு ஒரு போர்டு. அப்படியே கேமராவை கீழ இறக்கி, ரூமுக்குள்ள ஜூம் பண்ணா, நம்ம கவுண்டர் மவுஸை தேய்ச்சிக்க்கிட்டே மானிட்டருக்குள்ள மண்டைய உட்டு உன்னிப்பா கால் பந்து மேட்ச் பார்க்கிற மாதிரி கவனிக்கிறாரு.
அப்போ எண்ட்ரி தர்றாரு, தேங்கா சுரண்டி செந்தில், இனி நடக்கிற கூத்தை நீங்களே பாருங்கோ...
செந்தில்: அண்ணே! என்னண்ணே பண்றீங்க...?
கவுண்டர் பெல்: வாடா கமர்கட்டு தலயா... டேய் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த HMS ப்ராஜெக்ட் டெலிவரிக்கு போக போகுது, லட்ச ரூவா கெடைக்கும். அதான் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்கேன்.
செந்தில்: அண்ணே, என் சந்தேகத்தை தீத்து வைங்கண்ணே...
க.பெ: ஆஹ்... அப்படிக் கேளு, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர் வேணும்ன்றது. என்னடா உன் சந்தேகம்..?
செ: இந்த HMS ப்ராஜெக்ட் எப்படிண்ணே வேலை செய்யிது?
க. பெ: அடேய் கோமுட்டித் தலையா! இதோ இருக்க்கு பார்த்தியா?, இதுக்கு பேருதான் Eclipse... (ஆரம்பிச்ச கவுண்டரு Flow-அ செந்திலுக்கு விவரமா எடுத்து சொல்றாரு... ஒரு அரை மணி நேர explanation-க்கு பிறகு...)
"இதுல எப்படிண்ணே ரன் ஆகும்..? போங்கண்ணே"-னு சொல்ற செந்தில் Shift-ஐயும் Del button-ஐயும் அமுக்கிடறாரு... Project Screen, Blank ஆகிடுது...
செந்தில்: என்னண்னே அதுக்குள்ள Delete பண்ணிட்டீங்க... Full-ஆ சொல்லித்தாங்கண்ணே...
க.பெ: ???$#%#*
அப்போ பார்த்து அங்க வர்ற ஒரு புது Client, "ஏன்ங்க இங்க All In All Account Manager-ங்கிறது யாருங்க?"
செந்தில்: இதோ, இவருதான்....
க.பெ: டாய்... யெஸ் ஐ ஆம் ஆல் இன் ஆல் அக்கௌண்ட் மேனேஜர்.
Client: சாயங்காலம் ப்ராஜெக்ட் டெலிவரி தரணும், அதுக்கு HMS ப்ரொஜெக்ட் வேணும்...
க.பெ: HMS ப்ராஜெக்டே வேணுமா?
Client: ஆமாங்க...
க.பெ: ஏன் இந்த ரெயில் வே ரிசர்வேஷன், லைப்ரெரி ஆட்டோமேஷன் எல்லாம் வேண்டாமா?
Client: ரெயில் வே ரிசர்வேஷனா? அய்யோ அதெல்லாம் வேண்டாங்க...
க.பெ: அப்போ HMS ப்ராஜெக்ட் எல்லாம் இல்ல..
Client: ஏங்க...?
க.பெ: க்ராப் வெட்டியிருக்க Client-க்கு எல்லாம் HMS ப்ராஜெக்ட் கொடுக்குறது கெடையாது...
Cleint: &#^%$$$&^#%*...
கவுண்ட மணி திரும்பி பார்க்கும் போது, காம்பௌண்ட் சுவரை தாண்டி குதிச்சு செந்தில் ஓடி போறாரு. கவுண்டரு கொஞ்சம் எந்திருச்சி வந்து பால்கனில நின்னு பார்க்குறாரு...தெரு முனைல இருக்குற கோவில்ல ஒரு ஆளு சிதறு தேங்கா உடைச்சிட்டு இருக்காரு...
11 comments:
:)))
superu!! :-D
//நான் ரொம்ப நல்ல பையன்னு சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க...? //
ஹிஹி.என்னையே ரொம்ப நல்ல பொண்ணுன்னா நம்ப மாட்டாங்க இதுல நீங்க வேறையா?
//:)))//
//superu!! :-D//
நன்றி சீனியர்ஸ்...
// துர்கா said...
//நான் ரொம்ப நல்ல பையன்னு சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க...? //
ஹிஹி.என்னையே ரொம்ப நல்ல பொண்ணுன்னா நம்ப மாட்டாங்க இதுல நீங்க வேறையா?
//
இதுல நான் வேற இல்லீங்க, அதுல தான் நான் வேற... :-)
நன்றி துர்காக்கா... உங்க முதல் வருகைக்கும், "வாழ்த்துக்கும்" :)
arumai ARUMAI
ANPOODU
rahini
// rahini said...
arumai ARUMAI//
nanri NANRI :)
நீங்கல்லாம் சினிமா எடுக்கப்போகலாமே?
அன்புடன்
கமலா
நான் அவ்ளோ மோசமாவா எழுட்தரேன்... :)
நன்றி முதல் வருகைக்கும், கருத்துக்கும்...
hahaha.. very good one..
Thanks யாத்ரீகன்
Post a Comment