தலைப்ப பார்த்துட்டு எவனாவது, "வாடா மச்சா... செந்தில் அண்ணே கட் அடிக்க சொல்லித் தராரு"ன்னு தப்பா உள்ள பூந்திங்கண்ணா, 'யு' டர்ன் போட்டு திரும்பிப் பார்க்காமலே எஸ்-ஆயிடுங்க... இது "கட் அடிப்பது எப்படி"ன்ற பதிவு இல்லடா மச்சி...
நான் வழக்கம் போல ஏழாப்பு படிக்கும்போதுன்னு நெனைக்கிறேன். நல்லாப் படிக்குற பயதானே தவிர அறாத வாலு நான் எங்க ஸ்கூல்ல.(ஒங்க பேர்ல ஸ்கூல்லாம் இருந்த்தான்னு ஓல்ட் மொக்கையெல்லாம் போடப் படாது.) இப்ப ஒக்கார்ந்து இவ்ளோ டைப் பண்றேன், அப்ப்ல்லாம் ஸ்கூல்ல ஹோம் வொர்க் செய்யிறது கெடயாது, மச்சான் களையும் செய்ய விட்டதில்ல. ரெக்கார்ட் நோட்டு எழுதவே மாட்டேன். ஆறாவது ரெக்கார்ட் நோட்ட சன் டி.வி.-ல போட்ற "புத்தம் புதுசா" வச்சி பத்தாம் வகுப்புல யூஸ் பண்ணினத அதுல ரைட் போட்ட பத்தாப்பு வாத்தியாராலயே கண்டுபிடிக்க முடியல. நான் முதல்ல எழுதின ரெகார்டே பத்தாப்புலதான். வருஷா வருஷம் நோட்டு புக்கெல்லாம் வாங்கினவுடனே, அதுக்கு ட்ரெஸ் (ப்ரௌன் ஷீட்) பண்ணி பொட்டு வச்சி (லேபிள் ஒட்டி) திருஷ்ட்டி பொட்டும் வச்சி (அவய்ங்க பேரு லேபிலிள்), அழுக்கு பண்ற பயகளைப் பார்த்து இருப்பீங்க. ஆனா நான் அத அப்படியே வச்சி அடுத்த வருஷம் ஜூனியர் பசங்களுக்கு வித்துருவேன். ஏன்னா அவங்களுக்கு சப்ஜெட்டுக்கு ஒரு ரெகார்ட் பத்தாதாம்.அதுக்காகத்தான் நான் என் ரெகார்டக்கூட எழுதாம என்னோடத அவங்களுக்கு கொடுத்து வந்தேன்.எவ்வளவு நல்லவன் நான் இல்ல
திரும்ப ஏழாப்புக்குள்ள பூறுவோம். அன்னிக்கு முன்தின நாள், அறிவியல் வாத்தியார்,"நாளைக்கு வரும்போது எல்லாவனும் சயின்ஸ் ரெகார்ட எடுத்து வந்து ஸைன் வாங்கணும்"ன்னு சொல்லிட்டு போனாரு. (ஸைன் வாங்குறதுனாலதான் அதுக்கு சயின்ஸ்ன்னு பேரா? இந்த ஆராய்ச்சிய நாம அப்புறம் பார்க்கலாம்)...அவரு போனவுடனே (நல்லா படிக்குற எம்மேல பொறாமை கொண்ட) தோழர்கள் அடிச்ச கமென்ட்டுகள்,
1) நாளைக்கு செந்திலுக்கு ஆப்புடா.
2) செந்தில் நாளைக்கு புட்டத்த நல்ல தேத்திட்டு வாடா.(எங்க சயின்ஸ் வாத்தியாரோட ஸ்பெஷல் மசாலாவே, தப்பு பண்ணினதா தெரிஞ்சா பெஞ்சுக்கு கீழே குனியச்சொல்லி கும்மியடிச்சு (பிரம்பால) புட்டத்த பழுக்கடிச்சுருவாரு)
ஆனாலும் நான் ரொம்ப கூலாத்தான் இருந்தேன். நான் அடி வாங்கப் போரத நெனச்சி பயக அட்டகாசம் பண்ணாங்க. ஆனா மறுநாள் எல்லாமே உல்டாவாச்சு. அன்னிக்கு மதியம் வரைக்கும் எப்படி எஸ்ஸாகலாம்ன்னு மனசுக்குள்ளவே ப்ளான் போட்டுட்டு இருந்தேன். அன்னிக்குன்னு பார்த்து மூணாவது மாடில கட்டுரைப் போட்டி நடந்துண்டு இருந்துச்சு. மதியத்துக்கு மேல சயின்ஸ் க்ளாஸ கட்டடிச்சுட்டு கட்டுரைப் போட்டிக்கு எஸ்ஸாயிட்டேன். (தனியாத்தான்), தப்பு பண்ணும்போது கூட்டு, பொரியல்லாம் வச்சுக்கக்கூடாதுங்கறது என் கொள்கை. ரொம்ப நல்ல கொள்கை. இங்க கிருக்குற மாதிரி அங்கயும் கிறுக்கி ஆண்டு விழாவுல மூணாவது பரிசு வாங்கினேன். பயக செம காண்டுல இருந்தானுங்க,"பரதேசி நாயி, ரெகார்ட்ல எஸ் ஆனது மட்டும் இல்லாம, கட்டுரைப் போட்டில தேர்ட் ப்ரைஸ் வேற இவனுக்கு."
அதவிடக் கொடுமை அதே ஆண்டு விழாவுல எப்பவுமே நான் வாங்குற நல்லொழுக்க மாணவனுக்கான பரிசும் எனக்குதான். அதுக்கு காரணம் எங்க தமிழ் வாத்தியார், ஸ்கூல்ல இருக்குர ஒரே நல்லொழுக்க மாணவனைத் தேர்ந்தெடுக்கறது அவர்தான்ங்கறது, எங்க ஸ்கூல்லயே என்னைத் தவிர எந்த மாண்புமிகு மாணவனுக்கும் தெரியாத சிகரெட் ச்சீ சீக்ரெட். இதக் கண்டுபிடிக்கப் போட்ட பல திட்டங்கள்ல தோற்றாலும் சிம்பு மாதிரி இல்ல சிம்பு சொல்ற மாதிரி கடைசில ஜெயிச்சது என்னோட விடா முயற்சிதான். இத்ல இன்னொரு கொடுமை (வழுக்கையே ச்சீ வாழ்க்கையே கொடுமைதானய்யா), அவருதான் அந்த "செலக்டட் ஒன்"ஐத் தேர்ந்தெடுக்குறார்ன்னு தெரியாம மற்ற மாணவர்கள்லாம் அவர சீண்டி சொறிஞ்சு ரத்தம் பார்த்துக்கிட்டு இருந்தானுங்க அந்த முட்டாப் பயக.
எல்லா வாத்தியாரையுமே பட்டப்பேரிட்டு கூப்ட்டு சுண்ணாம்பு போட்டு சொறியுற நான் அவருகிட்ட மட்டும் பவ்யமா பம்முறத எந்த மானங்கெட்ட மாணவனும் கண்டுக்கல. அது எனக்கு நல்லதாப் போச்சி. தொடர்த்து 5 வருஷம் (6 - 10 ம் வகுப்பு) நல்லொழுக்க மாணவன்ற ரெகார்ட அந்த ஸ்கூல்ல இனி யாராலும் ஒடைக்க முடியாது.
அது ஒன்னுதான் நான் ஒழுங்காப் பண்ண ரெகார்ட். இதுலேர்ந்தே புரிஞ்சுக்கோங்க மக்கா, எவனும் கரணமில்லாம யார்கிட்டெயும் பம்ம மாட்டானுங்க. இந்த இடத்துல ஒரு தொடரும் டயலாக் போடணுமே.
ம்ம்ம்... இதுதான் நீங்கள் பம்ம வேண்டிய இரகசியம்...(சத்குரு ஜக்கி வாசுதேவ்-வோட தொடரும் டயலாக்). நாந்தான் களவானியாச்சுங்களே?!!!
No comments:
Post a Comment