Wednesday 11 April, 2007

ஞாபகம் வருதே...

என்னோட சின்ன வயசுல நடந்த சில காமெடியான சம்பவங்கள். இதெல்லாம் மொக்கை இல்லீங்க நானே மெய்யாலுமே அறியாத வயசுல தெரியாம பண்ண காமெடிகள்.

ஒரு 5 வயசு இருக்கும்... ஸ்கூல் விட்டு வந்தா பய வீட்டுல கபடி விளையாடி வீட்டுக்காரம்மாவோட சண்டை வளிச்சி விடுறாண்ட்டு எங்கம்மா ப்ரைவேட் (அதாவது ட்யூஷன் ) -ல சேர்த்தாங்க.

ட்யூஷன் -ல முதல் நாள் சார் என்னை கூப்புட்டு, என் ஸ்லேட்-ல கீழ இருக்குர மாதிரி எழுதி பெருக்கல் கணக்கு போடச் சொன்னாரு.

12x12
-------
_____

நான் அவரு கிட்ட ஸ்லேட்ட திருப்பி கொடுத்து, எங்க டீச்சர் இப்படிப் போடத்தான் சொல்லிக் கொடுந்தாங்கண்னு கீழ இருக்குர மாதிரி திருப்பி எழுதிக் காட்டினேன்.

12
x12
----
----
மனுஷன் டென்ஷனாகி, "ரெண்டுமே ஒன்னுதாம்ப்பா தம்பி"ன்னு சொல்லி ஒரு மணி நேரம், எப்படி செய்யணும்னு விளக்கம் கொடுத்தாரு.

அதப்பத்தி என் நண்பன்ட்ட பெருமையா வேற சொன்னேன்.."இன்தாளுக்கு பெருக்கல் கணக்கு கூடத் தெரியலடா மச்சான்".

மறுநாள் சாயந்திரம், அதே சார் என்னய கூப்ட்டு என்னோட கற்பழியாத ஹோம் வொர்க் நோட்-ல முதல் பக்கத்துல என் பேரை எழுதி, 3-ம் பக்கம் டாப்-ல க முதல் ன வரை எழுதனுங்கிறதுக்காக "க to ன"ன்னு எழுதினாரு.

என் திமிரு நான் வீட்ல போயி எல்லார்க்கிட்டேயும், என்னோட முதல் ஹோம் வொர்க்கை காட்டிட்டு எழுத உக்காந்தேன். மறுநாள் அவருகிட்ட காட்டும் போது எமகாதகப் பய இன்னிக்கு என்னத்தக் காட்டப் போரானோங்கற மாதிரி என்னய மொறைச்சிக்கிட்டே என் கைல இருக்கிற நோட்ட வாங்கிப் பார்த்துட்டு நொந்துப் போய்ட்டாரு பாவம். நான் எழுதி இருந்தது,

க to ன
க to ன
க to ன
க to ன

அவரு எழுதினத அப்படியே...

எனக்கு அப்ப english எல்லாம் தெரியாது, நானே கார்ப்பரேஷன் ஸ்கோல் பய எனக்குத் தெரிஞ்சத புரிஞ்த எழுதி வச்சேன்...

மறு நாளும் என் ரூபத்திலேதான் அவருக்கு 7.5 சனி...

என்னய கூப்பிட்டு ஆனா.. ஆவன்னா... தெரியுமாடா செந்தில்,ன்னார்
நான், "தெரியாது சார் எனக்கு தெரிஞ்சது அ.ஆ.இ.ஈ"ன்னேன் கூலாக.

மனுஷன் நொந்து நூலாகி, வெந்து நூடுல்ஸ் ஆகி, என்னய அந்த குட்டி ட்யுஷன்லேயே இன்னொரு டெபார்ட்மென்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டார்...

தொடரும் எனது அலுசாட்சியம்....

No comments: