Thursday 12 April, 2007

முதல் நடனம்

இதுவும் அதே மூணாப்பு படிக்கும்போது படிச்ச ட்யூஷன்ல நடந்தது தான்.

அது தம்மாத்தூண்டு ட்யூஷந்தான்னாலும், அதோட தலைவர் ஆண்டு விழாவ ரொம்ப சிற்ப்பா கொண்டாடுவார். நான் சேர்ந்ததுக்கப்புறம் வந்த முதல் விழாவுக்கு ஒரு கல்யாண மண்டபத்த புக் பண்ணி, அங்க நடன நிகழ்ச்சியெல்லாம் நடத்திறதுக்கு ஏற்பாடு பண்ணினாரு.( இது கண்டிப்பா நான் சேர்ந்ததுக்காக கெடயாதுங்கறதுன்னு எனக்குத் தெரியும்)_

யார் யாரெல்லாம் டான்ஸ் ஆடப்போறான்னு.. ஸார் கேட்டாரு, என் பக்கத்துல ஒக்காந்த பேரிக்கா மண்டைய (என் ஃப்ரெண்ட்டுதான்) என்னய பத்தி என்னவோ நல்லா தெரிஞ மாதிரி, "ஸார் செந்தில் நல்லா டான்ஸ் ஆடுவான்"ன்னு ஒரு பிட்ட தூக்கிப் போட்டான் அந்தப் பன்னாட.

அந்த மக்கு வாத்தியாரும், நம்ம அர்ஜுன் வாத்தியாரு மாதிரியோ, இல்ல நம்ம சத்யராஜ் மாதிரி வெவரமான ஆளோ கெடயாது. நார்மலா ஸாருங்க சொல்ற "ஒனக்கு தெரிஞ்சா ஆட்றா நாயே, மத்தவன ஏன் கோத்து விடற"ன்னு கேக்காம மாட்ணான்டா ஒருத்தன்னு என்னய கூப்டாரு.
"வாடா ராமா, ஆட்றா ராமா"ன்ற மாதிரி, அந்த பனங்கொட்ட மண்டையும் என்னய, "வாடா செந்தில் ஆட்றா செந்தில்"ன்னான்.

நானும் எனக்கு தெரிஞ்ச மாதிரி கை காலெல்லாம் ஆட்டினேன். பரதேசி நாய்ங்க இதையும் ஒக்காந்து ரசிச்சானுங்க, இல்ல பார்த்தானுங்க...

முதல்ல "ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா" (அக்னி நட்சத்திரம்) பாட்டுக்குத்தான் ஆடணும்ன்னு இருந்தது, ஆனா எங்களுக்கு இடுப்ப ஒலுங்கா ஆட்ட்த் தெரியலன்னு சொன்னான் அந்த தகர டப்பா டான்ஸ் மாஸ்டர். (அந்த டுபாகூருக்கு சிம்ரன் மாதிரி ஆட்டணும் போல.. அப்ப சிம்ரன்லா இல்ல அது வேற விஷயம்)

ஏண்டா ஆடத் தெரியாதவன எந்தப் பாட்டுக்கு ஆடவுட்டாலும் ஒரே மாதிரித் தானடா இருக்கும். கடைசியா நம்ம கேப்டன் நடிச்ச "கேப்டன் ப்ரபா." படத்துல "ஆட்டமா தேரோட்டமா" பாட்டுக்கு எங்கள ஓட விட்டாங்க ச்சீ ஆடவிட்டாங்க ஆனா நான் ஓடத்தான் செஞ்சேன். சில எடத்துல பம்முனேன். சில எடத்துல நம பாக்யராஜ் ஸார் மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணேன். (ஆமா அவர ஆடச்சொன்னா எக்ஸர்சைஸ்தானே பண்ணுவாரு).

டான்ஸ் க்ளாஸ்னு சொல்லி எங்கள அந்த டான்ஸ் மாஸ்டெர் பண்ன கொடுமை இருக்கே யப்பா கோராமை.. அதெல்லாம் வேணா உங்களுக்கு, அழுவீங்க. சீரியல எவனோ எழுத்றான்டின்ட்டு வாங்கடி அங்க போயி அழுவலாம், லேடீஸ் ல்லாம் என் பதிவ படிக்க வந்திருவாங்க.

அந்த ஆண்டு விழாவும் வந்தது. அதுல அந்த டான்ஸ் மாஸ்டர் மண்டையந்தான் படத்துல வர்ற மன்சூர் அலிகானோட வேஷம் போட்டான்... மவனே அவன வெஷம் வச்சில்ல கொல்லணும். ஒரு பொய்த் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு, நாங்க ஆடும் போது இல்ல ஆட்டும்போது (கைய காலத்தான்).. வீரப்பன் மாதிரி குறுக்க குறுக்க பூந்து எங்கள பயமுறுத்தினான். அவனுக்கும் எங்களுக்கும் ஆறு இல்ல ஒரே ஒரு வித்தியாசந்தான். நாங்கல்லாம் நின்னுக்கிட்டே ஆட்டினோம். ஆனா அவன் ஓடிக்கிட்டே ஆட்டினான். அந்த க்ரூப்லேயும், ஒரு தடித் தாண்டவராயன் இருந்தான். பேருதான் தாண்டவராயன் அவனெல்லாம் தாண்டவம் ஆடினா உலகம் இல்ல யூனிவர்ஸே தாங்காது. அவன் மட்டும் ஆடாம ஆட்டாம யானை மாதிரி காலை மாத்தி மாத்தி அசஞ்சான்.

ஒரு வழியா அந்த ஆண்டு எழவ ச்சீ விழாவ ஆட்டி அழுது முடிச்சோம், ஆனால் அதுக்கப்புறம் என்னய போட்டுக்கொடுத்த அந்த பேரிக்கா மண்டையன தெருத் தெருவா தொரத்தி அடிச்ச அடிச்ச அடி இருக்கே சொல்லி மாளாதுங்ண்ணா.
இப்பவும் நான் ரூம்ல தனியா இருக்கும் போது... தனுஷ் மாதிரி ஃபேன ஃபாஸ்டா வச்சி ஆடாம, ஸ்லோவா வச்சி ஆடுவேன் (ஆட்டுவேன்)... ரூம்ல தனியா ஆட்றதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் (அதுவும் பாட்டை சவுண்டா வச்சி. அதெல்லாம் தனி சுகம் ஆடாதவங்க ட்ரை பண்ணி பாருங்க...
எனக்கு மட்டும் இல்ல உலகத்துல நெறய பேரு அப்படித்தான் இல்ல...

4 comments:

கதிர் said...

யோவ் ட்யூஷனுக்கெல்லாம் ஆண்டு விஷாவா ஓவரா இருக்கே.

கதிர் said...

சாரி மிஸ்டேக் ஆகிப்போச்சு!

ஷா வ தூக்கிட்டு ழா வ போடுங்கோ செந்திலாண்டவரே

களவாணி said...

முதல் பின்னூட்டத்துக்கு நன்றி தம்பி, நீங்க சொன்ன மாதிரியே வடமொழி எழுத்தான 'ஷ" வ ரன்ல வர்ற மாதவன் மாதிரி 'தூக்கிட்டு' நம்ம தமிழ் மொழி எழுத்தான 'ழ' வ இன்ஸர்ட் பண்ணிட்டேன். நன்றி...

களவாணி said...

நாந்தான் சொன்னேனுங்களே அது குட்டியூண்டு ட்யூஷன்னாலும் அதோட தலீவரு பெருசாத்தான் கொண்டாடுவார்ன்ட்டு. அந்தாள்ட்ட அப்பமே சொன்னேன், ஸார் பந்தால்லாம் வாணா ஸார். அதுக்கு அந்தாளு அடப்போடா எடுபட்ட பயலேன்னுப்புட்டாரு.