Friday, 13 April 2007

முனி குரை(றை) விமர்சனம்....

என்னைப் பொறுத்த வரைக்கும் சுமாரானத விட்டுட்டு ரொம்ப நல்லது, ரொம்ப மோசமானதுன்னு ரெண்டா பிரிச்சி ரெண்டு வழி காட்டுவேன்.
அதே மாதிரிதான் சினிமாலயும், ஒன்னு கண்டிப்பா பார்க்கவேண்டியது, இன்னொன்ன சொல்லத்தேவையே இல்ல மேல இருக்குற படத் தலைப்பப் பார்த்தா ஒங்களுக்கே புரிஞ்சுருக்குமே. இன்னொரு காமடி என்னன்னா? (இன்னும் காமெடிய ஆரம்பிக்கவே இல்லடா நாயேன்னு சொல்லுறது கேட்குது). இந்தப் படத்துல நான் பார்த்ததே கடைசி அரை மணி நேரந்தான். அதப் பார்த்தே பதிவப் போடத் தூண்டுன படத்தோட டைரடக்கருக்கு (டைரக்டர்தான். சத்தியமா படத்தோட டைரக்டர் யாருன்னு எனக்குத் தெரியாது), முதல் சலாம்... இப்போ நிகழ்ச்சிக்கு போலாமா... (இவ்வளவு டையலாக் விட்டதுக்கப்புறம், இன்னும் ஆரம்பிக்கவே இல்லயா நீயி...)

முடிவப்பார்த்தே கதைய முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்...(இப்ப வர்ர படங்களோட பேரு சைசுதான் கதையே). வழக்கமான கதையா இல்லாம இந்த படத்துல ஒரு புதுமைய செஞ்சிருக்காரு நம்ம டைரடக்கரு. என்னன்னு கேட்குறீங்கள? வழக்கமான மசாலா படத்துல வில்லானும் தாதா, ஹீரோவும் தாதா, அனால் இதுல வில்லன் தாதா ஆனா ஹீரொ பேயி. டைரக்டரை நான் டெவில் ஷோவுக்கு சிபாரிசு செய்யிறேன்... நம்ம பழய மோகினி (மோகினின்னா பேய், நடிகை இல்ல.) கதைய பேர மாத்தி முனின்னு வச்சி நம்ம காதுல ரீல சுத்துறான் அந்த டைரக்டர் மண்டைய்யன்...

எனக்கு தெரிஞ்சு படத்துல நடிச்சுருக்குறது ஸாரி வந்து போறது, லாரன்ஸ் (பேய் பிடித்த ஹீரோ), வில்லன் (பேரு தெரியாது. "காதல்" படத்துல சந்தியாவோட அப்பா), அவரோட தம்பி, வடிவேலு மாதிரி (வடிவேலுவ நடிக்க வக்க பட்ஜெட் பத்தலையா ப்ரொடியூசர் சார், அவரோட ஜெராக்ஸ்ன்னு சொல்லி வேற எவனயோ கூட்டி வந்து ரிஸ்க் ரஸ்க்கெல்லாம் ஏன்யா?), பேய ஓட்ற மும்பை முஸ்லிம் பாய் (சாமியாரு). அட நம்ம முக்கியமான நாய ச்சீ... பேய மறந்துட்டனே.. நம்ம ராஜ்கிரண் ஸார்தான்.

கதைக்கு வருவோம் (அதெல்லாம் வேற இருக்கா?). ராஜ்கிரணக் கொல்லுறாரு வில்லன், ராஜ்கிரண் பேர்ல வில்லனக் கொல்லுறாரு நம்ம லாரன்ஸ். இது ஒரு கதையடா ?. வில்லன பழி வாங்க லாரன்ஸ புடிச்சிக்குறாரு பேய் ராஜ்கிரண். வில்லன் முன்னாடியே அவரோட ஆள ஒரே குத்துல மட்டையாக்கி வில்லன் கிட்டயே வெலைக்கு சேர்ராரு பேய் பிடிச்ச லாரன்ஸ். இந்த சீனுக்கு முன்னாடியே அந்த வடிவேலோட ஜெராக்ஸ், "இவன் ஊதுவான், அவன் அடிப்பான், இவன் மட்டையாவான், நம்ம அய்யா வாய பொளப்பாரு"ன்னு டைரடக்கரோட கதைய்ய லீக் பண்ணி சஸ்பென்ஸ ஒடக்கிறான். யாருடா அந்த வசன கர்த்தா? (அப்படியெல்லாம் படத்துல எவனும் இல்ல போல)... வில்லன்கிட்டே வேல செய்ய நாற்காலிய எல்லாம் சக்தி மான் மாதிரி சுத்த விடுறாரு லாரன்ஸ். வித்தைக்கு மயங்குன வில்லனும் வேலைக்கு சேத்துக்குறாரு. அடுத்த சீன்லயே வில்லனோட தம்பிக்கு ஆப்பு வக்கிறாரு லாரன்ஸ் என்கிற முனி.

பேய் பிடிச்ச லாரன்ஸ் வில்லனோட தம்பிய கொல்ல பார்ல டான்ஸ் ஆட்றாரு. சாதாரணமாவே அவரு டான்ஸப்பத்தி சொல்லவேணா. இதுல பேய் வேற புடிச்சிருச்சி. சும்மா பறந்து பறந்து ஆடுறாரு. வில்லனோட தம்பிய போட்டுர்றாரு. இதப் பாத்த ஜெராக்ஸ் வடிவேலு வில்லன்கிட்ட சொல்ல, நெஞ்சில இருக்கிற ரத்தத்த உறிஞ்சி டபாய்க்கிறாரு லாரன்ஸ். ஆனா வில்லனோட பொண்ணு பேய வீடியோல புடிச்சி வில்லனுக்கு காட்டுறாங்க. (பேய வீடியோல புடிக்க முடியாதுன்னானுங்க, இப்ப பேயப் புடிக்க புதுசா கேமரா வந்துருக்கு போல). இத பார்த்து ஜெர்க்-ஆகுற வில்லன் கூப்பிடுறது நம்ம யாரும் அறியாத மும்பை முஸ்லிம் பாயி. பேய் ஓட்றவங்க எல்லாம் ஏன் பேய் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்குறாங்கன்னு எனக்கு இன்னும் புரியல.அதுவும் இவரு ரொம்ப ஸ்பெஷல், பேய் கூட ஃபைட் எல்லாம் போடுறாரு.

சண்டைக் காட்சிக் அப்புறம், "எதையோ" தெளிச்சு பேயக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர்றாரு முஸ்லிம் பாய். அதுக்கு என்ன வேணும்னு கேட்க உண்மையெல்லாம் ஊர் மக்கள் முன்னாடி சொல்ல சொல்லுது பேய்.ஊரைஎல்லாம் கூட்டுறாரு (அதாவது கூப்புடறாரு, தொடப்பத்தால பெருக்கல) வில்லன்.

லாரன்ஸ ஒக்காத்தி வச்சு ஊர் மக்கள் முன்னாடி வித்தை காட்டுறாரு வில்லன். கூட்டம்னு வந்தா கூடிற்ராங்க நம்ம மக்களும். வில்லனும் உண்மையச் சொல்லிட்டு பணத்த திருப்பி மக்கஸ்ட்ட தர்றாரு. படையப்பால க்ரேனைட் கல்ல திருடி மணிவண்ணன்ட்ட காட்டுவானே ஒரு மாங்கொட்ட மூஞ்சி, அவன் பணமெல்லாம் வேணாம்ன்னு டைலாக் பேசிட்டு முனி மலையேருனதுக்கப்புறம் வாங்கப்பா முனி ஆசைய நெறவேத்தலாம்னு அதே பணத்த லவட்டிக்கிறான். கடைசி சீன்ல வந்து மறுபடியும் ஒட்டிக்குறாங்க நடிகை (இவங்க பேரும் தெரியாது,பாக்க நல்லாயிருக்கு மூஞ்சி மேக்கப் போட்டா மட்டும்).

படத்துல பாராட்ட வேண்டிய ஒரே ஆள், தயாரிப்பாளர்தான். தில் நெறயங்க அவருக்கு. ஊத்தி மூடுற படம்ன்னு முன்னாடியெ தெரிஞ்சும் எப்படித்தான் காசு தர்றாரோ. அத வச்சி நாலு நல்ல காரியம் பண்ணா புண்ணியமாவது கெடைக்கும்.

ராஜ்கிரண பத்தி சொல்ல எதுவுமே இல்ல, கடைசி சீன்ல ஏழடி எலைல இருக்கிற சோத்த வாய்க்குள்ள அமுக்குற அழக பார்க்க கண்ணு ரெண்ட ஏன்டா கொடுத்த சாமி.

2 comments:

கதிர் said...

இம்புட்டு நல்லா எழுதறிங்க எப்படிங்க எங்க எங்க கண்ணுல படாம இருந்திங்க?

தமிழ்மணத்துல இருக்கியளா இல்லயா?

இல்லன்னா சேத்துப்போடுங்க.

களவாணி said...

நன்றி தம்பி... எனக்கு ப்லாக்கர் பத்தி போன வாரந்தானே தெரிஞ்சது... இல்லாட்டி நானும் ஒங்க ஜோதில எப்பமோ ஐக்கியமாயிருப்போம்ல...

ஆமா தம்பி தமிழ் மணத்துல கலந்துக்க என்ன செய்யணும்னு சொன்னியனா நாங்களும் கும்மியடிச்சு கூத்தாடுவோம்.